அசாமில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி: நீதி விசாரணைக்கு உத்தரவு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கவுகாத்தி: அசாமில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். ஒன்பது போலீசார் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.வட கிழக்கு மாநிலமான அசாமின் தரங் மாவட்டம் தலாபூர் பகுதியில் 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் விவசாய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு
அசாம், போலீஸ், துப்பாக்கிச்சூடு, நீதிவிசாரணை

கவுகாத்தி: அசாமில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். ஒன்பது போலீசார் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

வட கிழக்கு மாநிலமான அசாமின் தரங் மாவட்டம் தலாபூர் பகுதியில் 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் விவசாய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதையொட்டி அப்பகுதியை ஆக்கிரமித்திருந்த 800 குடும்பங்களை வெளியேற்ற அரசு அதிகாரிகள், போலீசாருடன் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுத்து போலீசாரை கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கினர்.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தினர். ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதைத் தொடர்ந்து கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த காட்சியை படம் பிடித்த கேமராமேனை ஒருவர் கட்டையால் அடித்து ஓட ஓட விரட்டி வந்தார். உடனே போலீசார், விரட்டியவரை சூழ்ந்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மூர்ச்சையானார். அப்போதும் ஆத்திரம் அடங்காத கேமராமேன், விழுந்து கிடந்தவரை அடித்து தாக்கிய காட்சி சமூக ஊடகங்களில் வெளியானது.இந்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒன்பது போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு, காங்., எம்.பி., ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், தலாபூரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் மரணம் மற்றும் மோதலில் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-202122:47:36 IST Report Abuse
Saravanan அனைத்து பிரச்சனைக்கும் காரணம் இந்த கான்கிராஸ் தான்
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
24-செப்-202117:21:10 IST Report Abuse
Rpalnivelu //இந்த சம்பவத்திற்கு காங். எம்.பி. ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்// டூப்ளிகேட் கோந்தி எல்லா விஷயத்திலுமே தலையிட்டு கொண்டிருக்க வேண்டுமா? எங்காவது சாக்கடை அடைத்துக் கொண்டிருந்தாலும் கூப்பாடு போடுவாரா?
Rate this:
Cancel
baseball -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202114:04:02 IST Report Abuse
baseball அசாம் மாநிலத்தில் 800 முஸ்லீம் குடும்பங்கள் இந்திய அதிகாரிகளால் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்பட்டனர்ஒருவர் எதிர்த்தனால் அவரை கொன்று அவரது உயிரற்ற உடலில் காவலர்களோடு சேர்ந்து ஒரு பத்திரிகையாளன் பிணத்தை மிதிக்கும் பயங்கரமான காட்சி நம்புங்க இந்தியாவில் ஜனநாயக ஆட்சி 😏😏😏😏
Rate this:
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
24-செப்-202120:15:27 IST Report Abuse
ஏகன் ஆதன் தனி நாடு வேண்டும் என்று பாகிஸ்தான் சென்ற அவர்கள் பங்களாதேஷ் பிரச்சினையில் இந்தியா அடைக்கலம் கொடுத்தது . ஆனால் பிரச்சினை தீர்ந்ததும் பங்களாதேஷ் செல்ல மறுத்து விட்டு இந்தியாவில் தங்கி விட்டார்கள் . அதில் கூட தவறு இல்லை , ஆனால் உள்ளூர் கலாச்சாரத்தை கேவலமாக பேசுவதும் , பிற மதத்தினர் ஏரியா உள்ளே நுழைய அனுமதி மறுக்கும் பண்பும் அகதிகக்ளுக்கு அழகு அல்ல . நம்மூர் இசுலாமியர்கள் அதனால் தான் அஸ்ஸாமியர்கள் அவர்களை வெளியேற சொல்கின்றனர் . ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு என்பது போல நடந்தால் எங்குமே பிரச்சினை இல்லை . நீங்கள் கல்ப் நாட்டிற்கு சென்று ஏன் கலாச்சாரம் தான் கரெக்டு உங்கள் கலாச்சாரம் மோசம் என்ற ஆட்டிட்யூடை காட்டுங்கள் எத்துனை நாள் அங்கே உங்களை வைத்து இருப்பார்கள் . அடுத்து நீங்கள் அடைக்கலம் கொண்டு இருக்கும் இடத்தை அரசாங்கம் வேறு வேலைக்கு எடுத்துக்கொள்ளம் போது அங்கே உரிமை கொண்டாட முடியாது . கொடுத்து விட்டு அடைக்கலம் கொடுத்த நாட்டில் கொடுக்கும் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் அல்லது தாயகம் திரும்ப வேண்டும்...
Rate this:
THIRUMALAI KUMAR - chenai,இந்தியா
24-செப்-202120:55:56 IST Report Abuse
THIRUMALAI KUMARஉருட்டு கட்டை வைத்து அடிக்க வந்தால் அமைதியானவர்களா? நிருபரை ஏன் அடிக்க வர வேண்டும் - நிருபரை அடிப்பது ஜனநாயக உரிமையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X