அம்முண்டி ஊராட்சி காலியாக உள்ளதாக அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்முண்டி ஊராட்சி காலியாக உள்ளதாக அறிவிப்பு

Added : செப் 24, 2021
Share
காட்பாடி: அம்முண்டி ஊராட்சி காலியாக உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அம்முண்டி ஊராட்சி வருகிறது. அடுத்த மாதம் 6 ம் தேதி இங்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த ஊராட்சி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இங்கு பட்டியலின பெண்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். பெரும்பாலானவர்கள் வேறு சமூதாயத்தை

காட்பாடி: அம்முண்டி ஊராட்சி காலியாக உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அம்முண்டி ஊராட்சி வருகிறது. அடுத்த மாதம் 6 ம் தேதி இங்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த ஊராட்சி பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இங்கு பட்டியலின பெண்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். பெரும்பாலானவர்கள் வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள். இதனால் இட ஒதுக்கீட்டை மாற்றும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் இங்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காட்பாடி ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: அம்முண்டி ஊராட்சியில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தனியாத இங்கு தேர்தல் நடதப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X