பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: கொலை வழக்கில் சரியாக செயல்படாத எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடியாக வேலுாருக்கு மாற்றப்பட்டார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம், 40, என்பவர் கடந்த 10ம் தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கஞ்சா வியாபாரி இம்தியாஸ் உள்ளிட்ட 7 பேர் பல்வேறு நீதிமன்றங்களில்

வாணியம்பாடி: கொலை வழக்கில் சரியாக செயல்படாத எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிரடியாக வேலுாருக்கு மாற்றப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம், 40, என்பவர் கடந்த 10ம் தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கஞ்சா வியாபாரி இம்தியாஸ் உள்ளிட்ட 7 பேர் பல்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை சரியாக விசாரிக்காத வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., சிபிச்சக்கரவர்த்தி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து 10 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., யின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் என்பவரை கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்தித்த வசீம் அக்ரம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்திருந்ததும், அதை எஸ்.பி., யிடம் அவர் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்தது. இதனால் சரியாக செயல்படாத எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வேலுார் போலீஸ் பயிற்றி பள்ளிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

கஞ்சா வியாபாரி இம்தியாசிடம் அடிக்கடி மொபைலில் பேசி வந்த சைபர் கிராம் போலீஸ்காரர் மைதீன் என்பவர் ராணிப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஞ்சா வியாபாரி இந்தியாஸ் உள்ளிட்ட 17 பேர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு இன்ஸ்பெக்டராக நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வசீம் அக்ரத்தை கொலை செய்ய கூலிப்படையினருக்கு கத்தி, அரிவாட்களை வாங்கிக் கொடுத்த வாணியம்பாடியை சேர்ந்த கணேசை, 25, போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X