துறவி நரேந்திர கிரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை துவங்கியது

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
லக்னோ: துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.உ.பி.,யின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரியின் உடல், அவரது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டது. அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற துறவியர் அமைப்பின் தலைவராகவும் உள்ள அவர்,
துறவி நரேந்திர கிரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை துவங்கியது

லக்னோ: துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.

உ.பி.,யின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரியின் உடல், அவரது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டது. அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற துறவியர் அமைப்பின் தலைவராகவும் உள்ள அவர், தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருடைய உடல் அருகே அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் கிடைத்துள்ளது.தன் மறைவுக்குப் பின், மடத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை அதில் அவர் கூறியுள்ளார். இதைத் தவிர, பெண்களுடன் ஆபாசமாக இருப்பதாக திரிக்கப்பட்ட போலி படங்களை வெளியிடுவதாக மிரட்டப்பட்டதாகவும், அவமானப்படுவதைவிட மரணமே மேல் என முடிவெடுத்து உள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


latest tamil news



தன் முக்கிய சீடர்களான ஆனந்த் கிரி, ஆத்ய திவாரி, சந்தீப் திவாரி ஆகியோரின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைஅடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.


latest tamil news


இதனை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை துவக்கிய சி.பி.ஐ., இதற்காக தனிக்குழு ஒன்றை அமைத்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
25-செப்-202100:41:41 IST Report Abuse
Venkatakrishnan கடவுளிடம் நெருங்கி வாழும் சாமியாக்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானியனுக்கு என்னவென்று சொல்வது... ஹரே ஓ சம்போ
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
24-செப்-202121:51:57 IST Report Abuse
தஞ்சை மன்னர் நான் முன்னமே சொன்னதுதன இது பாலியல் பலாத்கார வினையாகத்தான் இருக்கும் என்றேன் சரியாகத்தான் இருக்கு
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-செப்-202116:05:02 IST Report Abuse
Vena Suna நரேந்திர என்ற பெயர் பிடிக்காமல் செய்த கட்சிகளின் "கை" வேலை தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X