துறவி நரேந்திர கிரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை துவங்கியது| Dinamalar

துறவி நரேந்திர கிரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை துவங்கியது

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (12)
Share
லக்னோ: துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.உ.பி.,யின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரியின் உடல், அவரது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டது. அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற துறவியர் அமைப்பின் தலைவராகவும் உள்ள அவர்,
துறவி நரேந்திர கிரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை துவங்கியது

லக்னோ: துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கினர்.

உ.பி.,யின் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தின் தலைவரான நரேந்திர கிரியின் உடல், அவரது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டது. அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற துறவியர் அமைப்பின் தலைவராகவும் உள்ள அவர், தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருடைய உடல் அருகே அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் கிடைத்துள்ளது.தன் மறைவுக்குப் பின், மடத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை அதில் அவர் கூறியுள்ளார். இதைத் தவிர, பெண்களுடன் ஆபாசமாக இருப்பதாக திரிக்கப்பட்ட போலி படங்களை வெளியிடுவதாக மிரட்டப்பட்டதாகவும், அவமானப்படுவதைவிட மரணமே மேல் என முடிவெடுத்து உள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


latest tamil news



தன் முக்கிய சீடர்களான ஆனந்த் கிரி, ஆத்ய திவாரி, சந்தீப் திவாரி ஆகியோரின் பெயர்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைஅடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.


latest tamil news


இதனை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை துவக்கிய சி.பி.ஐ., இதற்காக தனிக்குழு ஒன்றை அமைத்து உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X