உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (11)
Share
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு
Local Body Election, Tamilnadu, ADMK, ChennaiHC,

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரியும் அதிமுக மனு அளித்திருந்தது.


latest tamil news


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.,24) நடைபெற்றது. அப்போது, ‛ஊரக உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்,' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய அதிமுக.,வின் மனுவை பரிசீலித்து செப்.,29க்குள் பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X