கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடலூர் ஆணவக்கொலை: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
கடலூர்: கடந்த 2003ம் ஆண்டு நடந்த ஆணவ கொலை வழக்கில், இறந்த பெண்ணின் சகோதரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 போலீசார் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த முருகேசன்(25) மற்றும் கண்ணகி (22) ஆகியோர் காதலித்து கடந்த 2003 மே 5ல் திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்தனர். இருவரும்
கடலூர், ஆணவக்கொலை, தம்பதி, முருகேசன், கண்ணகி, கொலை, தூக்கு, ஆயுள்

கடலூர்: கடந்த 2003ம் ஆண்டு நடந்த ஆணவ கொலை வழக்கில், இறந்த பெண்ணின் சகோதரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 போலீசார் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த முருகேசன்(25) மற்றும் கண்ணகி (22) ஆகியோர் காதலித்து கடந்த 2003 மே 5ல் திருமணம் செய்து கொண்டு திருமணம் செய்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினர். இது பற்றி அறிந்த உறவினர்கள், ஜூலை 8 ம் தேதி அவர்களை காரில் அழைத்து வந்து காது மற்றும் மூக்கு வழியாக விஷத்தை செலுத்தி கொலை செய்ததுடன், உடல்களை தனித்தனியாக எரித்தனர்.

இது தொடர்பாக முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். கடந்த 2004ம் ஆண்டு, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில், கண்ணகியின் தந்தை, சகோதரர், உறவினர்கள் உட்பட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணை கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.


latest tamil news



வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜா, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும், தந்தை துரைசாமி, உறவினர்கள் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, தமிழ்மாறன், செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் லஞ்ச வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். செல்லமுத்து ஓய்வுபெற்ற டிஎஸ்பி என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறுகையில், இந்த கொலை காட்டுமிராண்டிதனமானது. குற்றவாளிகளுக்கு போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202108:48:25 IST Report Abuse
அப்புசாமி கொலைக் குற்றத்துக்கு துணைபோன செல்லமுத்து டி.எஸ்.பி யா பதவி உயர்வு பெற்று ரிடையரும் ஆயிட்டான். தமிழ்மாறன் இன்ஸ்பெக்டர் ஆயி, இன்னிக்கும் சஸ்பென்ஷன்ல இருக்கான். இவனுங்களை தூக்கில் போட்டிருக்கணும். மகாபாவிங்க.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
24-செப்-202121:32:24 IST Report Abuse
SUBBU இவளுக திமிரெடுத்து எவன் கூடயோ ஓடிப்போவாளுக,அப்றம் ஓடிப்போனவள கூப்டு வச்சு கொஞ்சவா முடியும்?தீர்ப்பு எப்படி வேணாலும் இருக்கட்டும்.அவள் செத்தது சரிதான்.என்றைக்கும் இது போன்ற ஓடுகாலிகள் சாக வேண்டியவர்களே.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
24-செப்-202116:12:34 IST Report Abuse
THINAKAREN KARAMANI CIVIL வழக்குத்தான் பத்து வருஷம் இருபது வருஷம் கேஸ் நடக்குமென்று சொல்வார்கள். இங்கயென்னடான்னா ஒரு CRIMINAL வழக்கு பதினெட்டு வருஷம் கழித்தது தீர்ப்பாயிருக்கு. எந்தக் கேஸ்ஸாக இருந்தாலும் ஓரிரு வருடத்துக்குள் தீர்ப்புவருவதுபோல் ஒரு சட்டம் கொண்டுவந்து மாற்றுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X