அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆதாரம் இல்லாமல் பொய் பிரசாரம் செய்யும் பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி திமுக மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் பிரசாரம் செய்துவருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: திமுக ஆட்சியின் மீது சேற்றை வாரி இறைப்பது போல எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி
ஆதாரம் இல்லாமல் பொய் பிரசாரம் செய்யும் பழனிசாமி: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி திமுக மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் பிரசாரம் செய்துவருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: திமுக ஆட்சியின் மீது சேற்றை வாரி இறைப்பது போல எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை நேரடியாக கண்காணிக்கும் அளவிற்கு அவரது அலுவலகத்தில் டேஷ்போர்டு வைக்கப்பட்டுள்ளது. முதல்வரே நேரடியாக அனைத்தையும் கண்காணித்து வருகிறார். வேளாண் துறையாக இருந்தாலும் சரி, எந்த துறையாக இருந்தாலும் சரி நேரடி கண்காணிப்பில் முதல்வர் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.


latest tamil news


திமுக.,வின் 130 நாட்கள் ஆட்சியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 20 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. பழனிசாமி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பழனிசாமி பொய் பிரசாரம் மேற்கொள்கிறார். இதுவே அவருக்கு பழக்கமாகி விட்டது. தான் ஆட்சியில் இருந்தபோது திமுக மீது வழக்கு போடவில்லை என அவர் கூறியிருக்கிறார். திமுக மீது வழக்கு போடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. திமுக தவறு செய்யவில்லை. அதனால் தான் திமுக.,வினர் மீது வழக்குப் போட முடியவில்லை. அது தான் உண்மை.

இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும், சட்ட ஒழுங்கை காக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. போர்டு நிறுவன விவகாரத்தில் அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202108:06:51 IST Report Abuse
rajan அப்படியானால் ஆதாரத்துடன் பொய் பிரச்சாரம் செய்யலாமா.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
25-செப்-202105:35:27 IST Report Abuse
Siva Kumar தீமுகவே ஒரு புழுக்கள் மிகுந்த ஒரு சாக்கடை. அதில் சேற்றை வாரி இறைத்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ஒரு பயனும் இல்லை.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
24-செப்-202122:42:13 IST Report Abuse
madhavan rajan இவிங்க கட்சி எப்படி பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தார்கள் என்பதையும் இவர் கூறுவாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X