டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு : தாதா உள்ளிட்ட 3 பேர் பலி ; நடந்தது என்ன ? பரபரப்பு தகவல்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் நீதிமன்றத்திற்குள் பிரபல தாதா ஜிதேந்திர கோகியை, வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் சுட்டுக்கொன்றனர். போலீசார் திருப்பி சுட்டதில் அவர்களும் உயிரிழந்தனர்.டில்லியின் வடக்கு பகுதியில் உள்ள ரோஹிணியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அறை எண் 207 அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால்,
 டில்லி, கோர்ட், துப்பாக்கிச்சூடு, 4 பேர் பலி ?

புதுடில்லி: டில்லியில் நீதிமன்றத்திற்குள் பிரபல தாதா ஜிதேந்திர கோகியை, வழக்கறிஞர் வேடத்தில் வந்தவர்கள் சுட்டுக்கொன்றனர். போலீசார் திருப்பி சுட்டதில் அவர்களும் உயிரிழந்தனர்.


latest tamil news


டில்லி கோர்ட்டில் துப்பாக்கி சண்டை 3 ரவுடிகள் சுட்டுக் கொலை

டில்லியின் வடக்கு பகுதியில் உள்ள ரோஹிணியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அறை எண் 207 அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால், அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.அப்போது, இரு வேறு ரவுடி கும்பல் மோதிக்கொண்டது தெரியவந்தது.


latest tamil news


Advertisement


வழக்கறிஞர்கள் உடையில் வந்த ஒரு கும்பல் மற்றொரு ரவுடி கும்பல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் உ.பி., ஹரியானா மாநிலங்களில் போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ஜிதேந்தர் கோகி உயிரிழந்தார். மோதலை தடுக்க போலீசார் பதிலடியாக துப்பாக்கியால் சுட்டனர்.


latest tamil news



சம்பவம் தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறியதாவது: டில்லியில் நீதிமன்ற அறையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ரவுடிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துளளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா, ஜிதேந்தர் கோகி, விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வந்த போது, போட்டி கும்பல் என்று கருதப்படும் ‛தில்லு கும்பல்' அவரை கொல்ல சதி திட்டம் தீட்டினர்.


latest tamil news



போலீஸ் பாதுகாப்புடன் ஜிதேந்தர் கோகி அழைத்து வந்த போது, வழக்கறிஞர்கள் உடையணிந்திருந்த இரண்டு ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர். பலத்த காயமடைந்த கோகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். போலீஸ் நடத்திய பதிலடியில், வழக்கறிஞர் உடையணிந்து வந்த 2 ரவுடிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




நீதிமன்ற வளாகததில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
24-செப்-202121:26:05 IST Report Abuse
SUBBU கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் இவன்களை அழைத்துக் கொண்டு பந்தோபஸ்த்து கொடுக்கும் போலீஸாருக்கு வேலை மிச்சம்.ஆக மொத்தம் ஃபைல் குளோஸ்.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-செப்-202120:21:29 IST Report Abuse
முக்கண் மைந்தன் இந்தியாவ்ல 'அச்சே தின்'னுங்க தொடர்ச்சியா தொடர்ந்துட்ருக்கு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-செப்-202120:18:57 IST Report Abuse
Ramesh Sargam நீதிமன்றத்தில் எப்படி துப்பாக்கியுடன் ஒருவர் நுழைய முடியும்? ஒரு விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால். விமான நிலயத்தினுள் நுழையும் போது அங்குள்ள காவலர்கள் முழு பேண்டையும் உருவி பயனியர்களை சோதனை செய்கிறார்கள். அப்படி இருக்கையில், நீதிமன்றத்தில் சோதனை இன்னும் அதிகம் இருக்கவேண்டுமல்லவா...
Rate this:
24-செப்-202121:35:52 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்அமித் ஷா உள்துறை அது உதவா துறை அப்புறம் என்ன...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-செப்-202122:45:06 IST Report Abuse
தமிழவேல் அதுதான் நம்ம திறமை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X