பெங்களூரில் வெடி விபத்து : 2 பேர் பலி| Dinamalar

பெங்களூரில் வெடி விபத்து : 2 பேர் பலி

Added : செப் 24, 2021
Share
பெங்களூரு : பெங்களூரில் லாரி சர்வீஸ் குடோனில், பட்டாசு மற்றும் மர்ம பொருள் வெடித்து, தமிழர் உட்பட இருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டை டி.சி.எம்.ராயன் சதுக்கம் அருகில் ஸ்ரீபத்ரகாளி அம்மன் லாரி சர்வீஸ் என்ற நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு நேற்று 80 பட்டாசு பெட்டிகளை ஏற்றி கொண்டு 'டாடா ஏஸ்' வாகனம்

பெங்களூரு : பெங்களூரில் லாரி சர்வீஸ் குடோனில், பட்டாசு மற்றும் மர்ம பொருள் வெடித்து, தமிழர் உட்பட இருவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டை டி.சி.எம்.ராயன் சதுக்கம் அருகில் ஸ்ரீபத்ரகாளி அம்மன் லாரி சர்வீஸ் என்ற நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு நேற்று 80 பட்டாசு பெட்டிகளை ஏற்றி கொண்டு 'டாடா ஏஸ்' வாகனம் வந்தது.அனைத்து பெட்டிகளும் குடோனுக்குள் இறக்கி வைக்கப்பட்டன.

சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. நுழைவு பகுதியில் இருந்த இரண்டு பட்டாசு பெட்டிகளும் வெடித்தன.அப்போது குடோனிலிருந்த இரண்டு நபர்கள் துாக்கி வீசப்பட்டனர். எதிரே இருந்த காம்பவுன்ட் சுவர் மீது சிலர் துாக்கி வீசப்பட்டனர். இதில் இருவர் கை, கால், தலை என உடல் சிதறி இறந்தனர். ஐந்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தின் திருக்கோவிலுாரைச் சேர்ந்த மனோகரன், 40, என்பவர் என தெரியவந்துள்ளது.

பயங்கர வெடி விபத்தில் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், டாடா ஏஸ் வாகனம் சேதமடைந்தன. அருகில் இருந்த கட்டடங்களில் கதவு, ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்தன. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X