சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி 'ஸ்கிரீன் ஷாட்டை' நம்பி ரூ.3.50 லட்சம் இழந்த பெண்

Added : செப் 24, 2021
Share
Advertisement
கரூர் : போலி 'ஸ்கிரீன் ஷாட்டை' நம்பி, 3.50 லட்சம் ரூபாயை ஆன்லைனில் இழந்த பெண் புகார் அளித்துள்ளார்.கரூர், ஆண்டாங்கோவில் சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் புனிதவதி, 34. இவர், தான் சேகரித்து வைத்திருந்த பழைய நாணங்களை விற்பனை செய்ய இணைய தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த நபர் ஒருவர் புனிதவதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த நாணயங்களை வாங்கி கொள்வதாக தெரிவித்து, உங்கள்

கரூர் : போலி 'ஸ்கிரீன் ஷாட்டை' நம்பி, 3.50 லட்சம் ரூபாயை ஆன்லைனில் இழந்த பெண் புகார் அளித்துள்ளார்.
கரூர், ஆண்டாங்கோவில் சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் புனிதவதி, 34. இவர், தான் சேகரித்து வைத்திருந்த பழைய நாணங்களை விற்பனை செய்ய இணைய தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த நபர் ஒருவர் புனிதவதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த நாணயங்களை வாங்கி கொள்வதாக தெரிவித்து, உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியதாக கூறியுள்ளார்.

'பணம் வரவில்லை' என, புனிதவதி தெரிவித்தவுடன், போலியாக ஒரு ஸ்கிரீன் ஷாட் தயார் செய்து அனுப்பி இருக்கிறார். தொடர்ந்து, 'உங்கள் கணக்கை புதுப்பித்தால் பணம் டெபிட் ஆகும்' என, கூறியுள்ளார். அதை நம்பிய புனிதவதி அந்த நபரின் வங்கி கணக்கிற்கு, 3 லட்சத்து, 50 ஆயிரத்து, 410 ரூபாய் செலுத்தியுள்ளார். இதன்பின் எந்த பதிலும் இல்லாததால் கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X