கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தனிநபர்கள் யானை வைத்திருக்க சென்னை ஐகோர்ட் தடை

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், யானைகளை தனிநபர்கள் வைத்திருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் எத்தனை யானைகள் உள்ளன. அதில், வளர்ப்பு யானைகள் மற்றும் வனத்துறை யானைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.தலைமை நீதிபதி
யானைகள், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம்,  ஐகோர்ட், தடை

சென்னை: தமிழகத்தில், யானைகளை தனிநபர்கள் வைத்திருக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் எத்தனை யானைகள் உள்ளன. அதில், வளர்ப்பு யானைகள் மற்றும் வனத்துறை யானைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகள், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளன. அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


latest tamil news



இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் தனியார் யாரும் யானையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
25-செப்-202105:59:58 IST Report Abuse
Sathish கேரளாவில் இப்படி சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். அங்க பெரிய போராட்டமே நடக்கும். தமிழ்நாட்ல என்ன வேணுனாலும் சட்டம் போடலாம். தமிழனுக்கு சம்பாரிக்க வேலைக்குப்போக குடும்பத்தை பார்க்க இதுக்கே நேரம் சரியா இருக்கு.
Rate this:
Cancel
RAHAMATHULLA - DOHA,கத்தார்
24-செப்-202121:41:37 IST Report Abuse
RAHAMATHULLA யாருக்கோ இடிக்குது நீதிபதியை விட்டு சொல்லிட்டாங்கோ.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
24-செப்-202120:47:57 IST Report Abuse
RaajaRaja Cholan சட்ட படிப்புக்கு , நீட்டுக்கு இணையான , அல்லது மேலான தேர்வு ஒன்று வேண்டும் , நீதிபதிகளை தேர்வு செய்யும் முறை மிகவும் கடுமை படுத்தப்பட்டால் நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X