சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூர் அருகே பட்டாலியன் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை

Added : செப் 24, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, பட்டாலியன் குடியிருப்பில் போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவள்ளூர் மாவட்டம், எரும்பி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார், 23. வேலுார் மாவட்டம், சேவூர் சிறப்பு காவல்படை 15 வது பட்டாலியனில் இவர் பணியாற்றி வந்தார். இதற்காக பட்டாலியன் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார்.நேற்று இரவு அஜித்குமார் அங்குள்ள

வேலுார்: வேலுார் அருகே, பட்டாலியன் குடியிருப்பில் போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், எரும்பி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார், 23. வேலுார் மாவட்டம், சேவூர் சிறப்பு காவல்படை 15 வது பட்டாலியனில் இவர் பணியாற்றி வந்தார். இதற்காக பட்டாலியன் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார்.நேற்று இரவு அஜித்குமார் அங்குள்ள படுக்கையறையில் துாங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு போலீஸ்காரர் சீனிவாசன் வெளியே துாங்கினார். இன்று காலை சீனிவாசன் எழுந்து உள்ளே சென்ற போது, படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் அஜித்குமார் துணியால் துாக்கிட்டு பிணமாக தொங்கினார்.

திருவலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். அஜித்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு அண்ணன், சகோதரி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X