தூத்துக்குடியில் 47 ரவுடிகள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் 47 ரவுடிகள் கைது

Added : செப் 24, 2021
Share
தூத்துக்குடி: தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பழைய வழக்குகளில்
தூத்துக்குடியில்  47 ரவுடிகள் கைது


தூத்துக்குடி: தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு முழுவதும் விடிய, விடிய தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பழைய வழக்குகளில் ஈடுபட்ட 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X