பதவி வரும்போது பணிவு வர வேண்டும்: நிதி அமைச்சர் தியாகராஜனுக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (61) | |
Advertisement
சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன், வார்த்தை போர் நிலவி வரும் சூழலில், ‛பதவி வரும்போது பணிவு வர வேண்டும்,' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது மிகப்பெரிய விவாத பொருளானது. இது தொடர்பாக நிதியமைச்சருக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்
GSTCouncil, PTR, Jayakumar, Finance Minister, Tamilnadu, DMK, ADMK, ஜிஎஸ்டி கவுன்சில், ஜெயக்குமார், பழனிவேல் தியாகராஜன், பிடிஆர், திமுக, அதிமுக, நிதியமைச்சர்

சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன், வார்த்தை போர் நிலவி வரும் சூழலில், ‛பதவி வரும்போது பணிவு வர வேண்டும்,' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது மிகப்பெரிய விவாத பொருளானது. இது தொடர்பாக நிதியமைச்சருக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் உருவானது.

இந்நிலையில், ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும், பெரியவர் - சிறியவர் பேதமின்றி டுவிட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த பதவிக்கு அழகல்ல.


latest tamil news


முதன்முறை அமைச்சர் ஆனதால் தலைகால் புரியாமல் சித்தம் கலங்கி பேசுவது போல் பேசி வருவதால், சில வரலாற்று உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்து கொண்டு ஜிஎஸ்டி- யின் வரலாறு தெரியாமல் இருப்பது தங்களுக்கு அழகல்ல. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக அங்கம் வகித்திருந்த போது, தமிழகத்திற்கு மத்திய அரசு வைத்திருந்த வாட் வரிக்கான நிலுவை தொகை மட்டும் ரூ.4,080 ஆயிரம் கோடி. நீங்கள் நினைத்திருந்தால் ஆட்சியை கலைப்பேன் என்று கூறி, அந்த நிலுவைத் தொகையை பெற்றுத் தந்திருக்க முடியும்.


latest tamil news


ஆனால் பதவி சுகத்திற்கு ஆசைப்பட்டு தமிழக மக்களின் நலன்களை அடகு வைத்து வாளாவிருந்தீர்கள். அதன் நீட்சியாகத் தான் இப்போதும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், துணிவும் வரவேண்டும் என்று பாடியிருப்பார் எம்.ஜி.ஆர். இந்த பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? பழனிவேல் தியாகராஜனுக்கு மிகவும் பொருந்தும். பதவியில் இருக்கும் போது பணிவு இருக்க வேண்டியது மிகமிக அவசியம். உங்களுக்கும் நாகரீகம் என்ற சொல்லுக்கும் ஏழாம் பொருத்தம் போல. இருந்த கொஞ்சநஞ்சத்தையும் அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு வந்து வீட்டீர்கள் என நினைக்கிறேன்.


latest tamil news


தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் சுயமோகி. நானும் படித்தவன் தான், இரண்டு பட்டங்கள் பெற்றவன் தான். இளம் அறிவியலிலும் முதன்மையான மாணவன், சட்டப் படிப்பிலும் அப்படியே. அதற்காக ஒருநாளும் கர்வம் கொண்டு அலைந்தவனல்ல. படிப்பு வேறு, களநில பொருளாதாரம் வேறு என்று இப்போது தான் உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள் பொருளாதாரத்தை புத்தகத்தில் படித்திருப்பீர்கள், பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு - பணக்காரர்களுக்கு வேலை செய்திருப்பீர்கள்.

நீங்கள் ஏன் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினால் 2017-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி நானும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று எதிர்கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். அன்றைய தினம் தமிழக நிதியமைச்சர் என்ற முறையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தேன். எனவே, டுவிட்டர் உலகத்தில் இருந்தும், மற்றவர்களை வசைபாடுவதில் இருந்தும் விலகி மக்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள். இனியாவது நல்ல மாணவன் எப்படி தவறாமல் பள்ளிக்கு செல்வானோ அதுபோல கடமை உணர்வுடன் ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் அட மட சங்கிகளே!!! வளை காப்பு நடக்கும் அதே தேதியில் ஜிஎஸ்டி கூட்டம் வைத்து யார் தவறு??. ஜிஎஸ்டி கூட்டம் மாதா மாதம் ஏன் வாரா வாரம் கூட நடத்தலாம். வளைகாப்பு அப்படி நடத்த முடியுமா!!!. வளைகாப்பு காப்பு நடத்தும் அதே தேதியில் ஜிஎஸ்டி கூட்டம் வைத்து அமிச்சரை மீட்டிங்கில் கலந்து கொள்ளாமல் வைத்து அவர் குடும்பத்தில் கலகம் விளைவிக்க சங்கிகள் செய்த சதியை அமிச்சர் அற்புதமாக முறியடித்தார். திராவிடண்டா!! யாரு கிட்ட???
Rate this:
Cancel
25-செப்-202108:23:50 IST Report Abuse
சாம் சார்.. கொளுந்தியா சார்.. பச்ச மண்ணு சார்... திராவிட கலாச்சார படி வளைகாப்பு சார்... முக்கியம் சார்.. GST ஆரிய கலாச்சாரம் சார்...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-செப்-202108:04:55 IST Report Abuse
rajan உங்க அம்மா ஆங்கில TV. சேனல் பேட்டியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எரிச்சல் அடைந்து காலர் மைக்கை கழட்டி வீசியது நினைவு இல்லையா. ஒரு C.M. செய்யும் வேலையா இது.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
25-செப்-202112:17:14 IST Report Abuse
Balajiஎப்போதாச்சு அந்த வீடியோ பாத்துகீரியா நாயனா நீயி? எப்போ அவிங்க காலர் மைக்க கழட்டி வீசினாய்ங்க? அத்த ஒருதபா மரிக்கா பாரு நாயனா.. ஒநக்கி பண்புன்னா இன்னான்னு பிரியும்... அந்த பேட்டி அவர்கள் கொடுத்தது BBC யில்.. லோக்கல் 200 ரூபா நம்ம காசுவாங்கி சேநல்கள் இல்லை. ஹெஹெ......
Rate this:
Balaji - Chennai,இந்தியா
25-செப்-202112:19:52 IST Report Abuse
Balajiஅப்புறம் அவிங்க பதில் சொல்ல முடியாம எரிச்சல் எல்லாம் படலை.. அந்தா மீறி உள்குத்து கெய்வியெல்லாம் என்கைல கேக்கறத உற்றுன்னு ரீஜென்ட்டா சொல்லி தான் பேட்டியை முடிச்சாய்ங்க.. அப்புடியே கிளீனர் மீறியே நீங்க எல்லாருமே எப்போமே பொய் தான் பேசுவீங்களா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X