சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் ஆவின் உள்ளிட்ட 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : செப் 24, 2021
Share
Advertisement
வேலுார் : வேலுார் ஆவின் உள்ளிட்ட இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணியின், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீடு, அவரது நெருங்கிய நண்பர்கள் என 35 இடங்களில் கடந்த 16 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி நகை, அமெரிக்க டாலர், பணம் போன்றவற்றை கைப்பற்றினர்.இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு
வேலூரில் ஆவின் உள்ளிட்ட 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேலுார் : வேலுார் ஆவின் உள்ளிட்ட இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணியின், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீடு, அவரது நெருங்கிய நண்பர்கள் என 35 இடங்களில் கடந்த 16 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி நகை, அமெரிக்க டாலர், பணம் போன்றவற்றை கைப்பற்றினர்.

இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு வேலுார் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகம், வேலுார் சாய்நாதபுரம் சம்பத்குமார் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஆவின் தலைவராகவும், வேலுார் புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் வேலழகன், சாய்நாதபுரம் சம்பத்குமார் ஆகியோர் மாஜி அமைச்சர் வீரமணியின் நண்பர்கள். இதனால் வீரமணி குறித்த ஆவணங்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக போலீசார் கூறினர். மதியம் 3:00 மணி வரை நடந்த சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பிச்சென்றனர். சோதனை குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X