சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனச்சரக அலுவலர் கைது: வனத்துறையினர் வேலை நிறுத்தம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வனத்துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கடந்த, 22ம் தேதி வனத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் தங்கிய வி.ஐ.பி., ஒருவரின் மகன்கள் உள்பட, மூன்று பேர் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் இடையே வாக்குவாதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வனத்துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கடந்த, 22ம் தேதி வனத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் தங்கிய வி.ஐ.பி., ஒருவரின் மகன்கள் உள்பட, மூன்று பேர் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வனச்சரக அலுவலர் குடிபோதையில் இருந்ததாகவும், தங்கும் விடுதியில் இருந்து மூவரையும் வெளியேற்றி, வி.ஐ.பி.,யின் மகனை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக, வால்பாறை கோர்ட் எழுத்தர் மனோகரன் வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரனை நேற்று (23ம் தேதி) போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து இன்று (24ம் தேதி) பொள்ளாச்சியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில், வனச்சரக அலுவலர்கள் முதல் வேட்டைத்தடுப்பு காவலர்கள் வரையிலான, 350க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் சிவபிரகாசம் தலைமை வகித்தார். பொள்ளாச்சி கோட்டத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வனச்சரக அலுவலரை விடுதலை செய்ய, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X