மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு,
Supreme Court, ChennaiHC, Medical, EWS, Reservation, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், சென்னை, உயர்நீதிமன்றம், மருத்துவப்படிப்பு, இட ஒதுக்கீடு, உத்தரவு, ரத்து

புதுடில்லி: மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திமுக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.


latest tamil news


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்ற ஒப்புதலுடன் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202109:15:29 IST Report Abuse
ஆரூர் ரங் சென்ற ஆண்டு மருத்துவ இடங்களில் நான்கு விழுக்காடு மட்டுமே முற்பட்டசாதியினருக்குக் கிடைத்தது. மீதி OC இடங்கள் BC MBC க்குப் போய் விட்டது. முற்பட்ட ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி😒 இது. இன்னும் கூட நீட்டால் பிற்பட்ட வகுப்பினருக்கு பாதிப்பு என்று கதை விடுகிறார்கள். பட்டியலின ஒதுக்கீடு 100 சதவீதம் நியாயம். பிற்பட்ட ஒதுக்கீடு வாக்கு வங்கிக்காக நாடகம் . ஏமாற்று வித்தை
Rate this:
Cancel
25-செப்-202109:15:19 IST Report Abuse
ஆரூர் ரங் சென்ற ஆண்டு மருத்துவ இடங்களில் நான்கு விழுக்காடு மட்டுமே முற்பட்டசாதியினருக்குக் கிடைத்தது. மீதி OC இடங்கள் BC MBC க்குப் போய் விட்டது. முற்பட்ட ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி😒 இது.இன்னும் கூட நீட்டால் பிற்பட்ட வகுப்பினருக்கு பாதிப்பு என்று கதை விடுகிறார்கள். பட்டியலின ஒதுக்கீடு 100 சதவீதம் நியாயம். பிற்பட்ட ஒதுக்கீடு வாக்கு வங்கிக்காக நாடகம் . ஏமாற்று வித்தை
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
25-செப்-202105:48:42 IST Report Abuse
Krishnan திமுக ஆட்சியில் இருக்கும்வரை, ஸ்டாலின் இருக்கும்வரை பொதுப்பிரிவினருக்கான இடவொதிக்கீட்டை அமல்படுத்தாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X