பொது செய்தி

இந்தியா

ஆப்பிள் ஐபோன் 13 விற்பனை துவங்கியது

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 14ம் தேதி கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை இன்று(செப்.,24) முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8:00 மணி முதல் ஆப்பிள் இணையதளம், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லரை
ஐபோன்13, iphone13, sales.

புதுடில்லி: கடந்த 14ம் தேதி கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை இன்று(செப்.,24) முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 8:00 மணி முதல் ஆப்பிள் இணையதளம், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை துவங்கியது.


ஐபோன் 13 மாடல் விலை விவரம்


புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்13 மினி ரூ.69,999 என்றும், ப்ரோ ரூ.1,19,000 என்றும், ப்ரோ மாக்ஸ் ரூ.1,29,000 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.


சிறப்பம்சம்

ஐபோன்12யை விட மேலும் முன்னகர்ந்து முக்கிய தொழில்நுட்பத்துடன் வெளியாகினது ஐபோன்13. இதில், 6.1 மற்றும் 6.7 இன்ச் அளவுள்ள தொடுதிரை என, நான்கு மாறுபட்ட தொடுதிரை அளவுடன் வெளியாகினது. நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம்; 5எம்என் வேவ் லெந்த்; ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம்; லிடார் சென்சார்; நீண்ட நேர பேட்டரி வசதி ஆகியன உள்ளன.


latest tamil news


பிரத்யேகமாக, கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிந்த ஒருவரின் முகம் மற்றொருவருக்கு முழுதாக தெரிவதில்லை. இந்நிலையில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் 'முகத்தை அறியும்' வசதியை ஆப்பிள் 'ஐபோன்13' ஸ்மார்ட்போனில் உள்ளது. கடவுச் சொல்லைப்போல 'பேஸ் டிடெக்சன்' எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இனி வரும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற 'பேஸ் ஐடி' இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


எக்ஸ்சேஞ்ச் வசதி


ஐபோன் 13 வாங்க விரும்புபவர்களுக்காக பழைய மாடலை ஐபோன்களை மாற்றி கொள்ளும் வசதியையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. பழைய ஆன்ட்ராய்டு போனையும் மாற்றி கொண்டு புதிய போன்களை வாங்க முடியும்.

திரும்ப பெற்று கொள்ளப்படும் பழயை மாடல் போன்களுக்கான விலையும் வெளியாகி உள்ளது.
இதன்படி
ஐபோன் 12 - ரூ.31,120 வரையிலும்
ஐபோன் 12 மினி - ரூ.25,565 வரையிலும்
ஐபோன் எஸ்இ (2ம் தலைமுறை) - ரூ.12,155 வரையிலும்
ஐபோன் 11 - ரூ.23,585 வரையிலும்
ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் - ரூ.22,020 வரையிலும்
ஐபோன் எக்ஸ் எஸ் - ரூ.21,680 வரையிலும்
ஐபோன் எக்ஸ் ஆர் - ரூ.15,685 வரையிலும்
ஐபோன் எக்ஸ் - ரூ.16,810 வரையிலும்
ஐபோன் 8 பிளஸ் - ரூ.12,790 வரையிலும்
ஐபோன் 8 - ரூ.10,245 வரையிலும்
ஐபோன் 7 பிளஸ் - ரூ.10,550 வரையிலும்
ஐபோன் 7 - ரூ.7,865 வரையிலும்
ஐபோன் 6s பிளஸ் - ரூ.5,390 வரையிலும்
ஐபோன் 6s - ரூ.4,920 வரையிலும்
ஐபோன் 6 பிளஸ் - ரூ.4,805 வரையிலும்
ஐபோன் 6 -ரூ.3,805 வரையிலும்
ஐபோன் எஸ்இ (முதல் தலைமுறை) -ரூ.2,810 வரையிலும் விலை போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekhar Guruswamy - chennai,இந்தியா
24-செப்-202118:58:15 IST Report Abuse
Sekhar Guruswamy i போன் 13 ஒரு புதிய அம்சம் உள்ளது. அது Face Reading. இந்த மாடலை என்னுடைய அலைபேசியில் கண்டபொழுது அது என்னிடம் கூறிய வார்த்தைகள் "Get Lost....You can't afford me"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X