ஆத்தூர்: மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், வெங்கடாஜலம். ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான இவர், தற்போது, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள அவரது வீடு, பண்ணை தோட்டம் மற்றும் சொந்த ஊரான, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையத்தில் உள்ள வீடு உள்பட ஐந்து இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், இவரது வீட்டில் இருந்து ஆவணங்கள், சொத்துகள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை என்றும், ரூ.13.5 லட்சம் ரொக்கப்பணம், ரூ.2 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்ட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று (செப்.,24) நடைபெற்ற சோதனையில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வெங்கடாஜலத்தின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE