சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்கோள் - புறக்கோள் வேறுபாடுசூரியக்குடும்பத்தில் சூரியனை சுற்றி புதன், வெள்ளி, பூமி போன்ற கிரகங்கள் உள்ளன. இதுபோல நட்சத்திரங் களை சுற்றியும் கிரகங்கள் உள்ளன. சூரியனைச் சுற்றும் கிரகங்களை 'கோள்கள்' எனவும், சூரியன் அல்லாத நட்சத்திரங்களைச் சுற்றும் கிரகங்களை 'புறக்கோள்கள்' எனவும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். கடந்த 2021 செப். 1 அடிப்படையில் 3572

அறிவியல் ஆயிரம்
கோள் - புறக்கோள் வேறுபாடு
சூரியக்குடும்பத்தில் சூரியனை சுற்றி புதன், வெள்ளி, பூமி போன்ற கிரகங்கள் உள்ளன. இதுபோல நட்சத்திரங் களை சுற்றியும் கிரகங்கள் உள்ளன. சூரியனைச் சுற்றும் கிரகங்களை 'கோள்கள்' எனவும், சூரியன் அல்லாத நட்சத்திரங்களைச் சுற்றும் கிரகங்களை 'புறக்கோள்கள்' எனவும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். கடந்த 2021 செப். 1 அடிப்படையில் 3572 நட்சத்திரங்களை சுற்றி வரும் 4834 புறக்கோள்களை விண்வெளி ஆராய்ச்சிகளின் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இதில் 795 நட்சத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புறக்கோள்கள் உள்ளன.

தகவல் சுரங்கம்
உலகை சுற்றிய பெண்

முதன்முதலில் விமானத்தில் பறந்து உலகை சுற்றிய பெண்மணி ஜெர்ரி மாக்.அமெரிக்காவின் பெண் விமானியான இவர் 1964ல் 'செஸ்னா 180' என்ற ஒற்றை இன்ஜின் விமானத்தில் உலகை சுற்றி வந்தார். 1964 மார்ச் 19ல் கொலம்பஸ்சில் தொடங்கி மொராக்கோ, சவுதி, வியட்நாம் உட்பட பல நாடுகள் வழியாக 29 நாட்கள் பயணித்து 37 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்து மே 16ல் மீண்டும் கொலம்பஸ்சை வந்தடைந்தார். இப்பயணத்தில் 21 இடங்களில் தரையிறங்கினார். இதில் அட்லாண்டிக் கடல் வழியாக பயணித்தது சவாலாக இருந்தது என குறிப்பிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X