சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முடியை ஒட்ட வெட்டியதால் மன உளைச்சல்:வாடிக்கையாளருக்கு ரூ.2 கோடி இழப்பீடு!

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் ஐ.டி.சி., மயூரியா சலூனில் பெண் மாடல் ஒருவரின் முடியை தவறுதலாக ஒட்ட கத்தரித்துவிட்டனர். அதனால் கடும் மன உளைச்சலடைந்த அப்பெண் தேசிய நுகர்வோர் குறைதீர்வு அணையத்தில் புகார் அளித்தார். அம்மனுவை விசாரித்த ஆணையம், அப்பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி ஐ.டி.சி., மயூரியா சலூனுக்கு உத்தரவிட்டது. ஷாம்பு உள்ளிட்ட கூந்தல் பராமரிப்பு

புதுடில்லி: டில்லியில் ஐ.டி.சி., மயூரியா சலூனில் பெண் மாடல் ஒருவரின் முடியை தவறுதலாக ஒட்ட கத்தரித்துவிட்டனர். அதனால் கடும் மன உளைச்சலடைந்த அப்பெண் தேசிய நுகர்வோர் குறைதீர்வு அணையத்தில் புகார் அளித்தார். அம்மனுவை விசாரித்த ஆணையம், அப்பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி ஐ.டி.சி., மயூரியா சலூனுக்கு உத்தரவிட்டது.latest tamil newsஷாம்பு உள்ளிட்ட கூந்தல் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 42 வயது பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்தார். கடந்த 2018 ஏப்ரல் மாதம் தனது துறையில் ஒரு முக்கியமான நேர்காணலுக்கு செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக டில்லி ஐ.டி.சி., மயூரியா சலூனுக்கு சென்று தன்னுடைய கூந்தலை அழகுப்படுத்திக்கொள்ள எண்ணியுள்ளார். அங்கு உள்ள சிகையலங்கார கலைஞரிடம் முன்பக்கம் ப்ளிக்ஸ் செய்யும் படி, கூந்தலை அடிப்பகுதியை நான்கு அங்குலம் வரை ட்ரிம் செய்யும்படியும் கூறியுள்ளார்.

அவர் சொன்னதை தலைகீழாக புரிந்துக்கொண்ட சிகையலங்கார கலைஞர், அப்பெண்மணியை குணியச் சொல்லிவிட்டு மிஸ்டர் பீன் போன்று பின்னங்கழுத்திலிருந்து நான்கு அங்குலம் விட்டுவிட்டு மொத்த கூந்தலையும் கத்தரித்து தள்ளியுள்ளார். நிமிர்ந்து பார்த்த அப்பெண்மணி அதிர்ச்சியாகி அவரை திட்டித்தீர்த்துள்ளார். தனது மாடலிங் கனவே பறிபோய்விட்டது என கதறி அழுதுள்ளார். தாராள மனது கொண்ட ஐ.டி.சி., மயூரியா, மன்னிப்பு கேட்டதுடன், முடி திருத்தம்(!) செய்ததற்கு பணம் செலுத்த வேண்டாம் என கூறியுள்ளது.

ஆனாலும் தவறு செய்த சிகையலங்கார கலைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அம்மாடலிங் பெண்மணி தனது புகாரில் கூறியுள்ளார். ஐ.டி.சி., ஹோட்டல் சி.இ.ஓ.,வை தொடர்புகொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார். அதன் பிறகு முடி வளர்வதற்கான சிகிச்சையை அவருக்கு செய்துள்ளனர். அப்போதும் அலட்சியமாக செயல்பட்டு அதிக அம்மோனியாவை கலந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது தலையின் மேற்பகுதி பாதிக்கப்பட்டு அதிக எரிச்சல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதன் பின்னர் இவை சரிவராது என தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தை நாடியுள்ளார்.


latest tamil news


இப்புகாரை விசாரித்த அணையம் ”தலைமுடியை இழந்ததால் அவரால் தனது பணியை தொடர முடியவில்லை. பெரும் இழப்பைச் சந்தித்துள்ளார். இதனால் அவருடைய வாழ்க்கை முறையே முற்றிலும் மாறி சிறந்த மாடலாக வேண்டும் என்ற அவர் கனவு சிதைந்தது. அவரது மன உளைச்சலையும் இழப்பையும் கருத்தில் கொண்டு, அவருக்கு இழப்பீடாக ஐ.டி.சி., மயூரியாரூ.2 கோடி வழங்க வேண்டும்.” என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தது.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
25-செப்-202106:21:55 IST Report Abuse
 Muruga Vel மூணு நாலு வருஷத்துல தீர்ப்பு சொல்லி சாதனை படைத்திருக்கிறார் ..இன்னும் விலாவாரியா விசாரிச்சு அடுத்த பாத்து வருஷத்துல தீர்ப்பு சொல்லியிருக்கலாம் ..என்ன அவசரமோ ..
Rate this:
Cancel
25-செப்-202100:04:27 IST Report Abuse
A.Balasbramanian ITC MAYURA SALOON இல். சிகை அலங்காரம் செய்வதற்கு முன்பு,, வாடிக்கையாளர் விவரங்களை சேகரித்து, அதன்பிறகே சிகை அலங்காரங்கள் செய்யவேண்டும்,ITC SALOON தவறிவிட்டது,,2 கோடி அபராதம் மிகவும் அதி கம்,,
Rate this:
Cancel
24-செப்-202122:07:59 IST Report Abuse
theruvasagan புரட்சிகரமான தீர்ப்பு. உசுர விட ..சுருக்குத்தான் மதிப்பு அதிகம் என்கிற பேருண்மையை தெரிவித்து நம்ம அறிவுக் கண்ணை தொறந்துடுச்சு♦.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X