சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இப்போவே புரிஞ்சுருச்சு!'

Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'இப்போவே புரிஞ்சுருச்சு!'வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதன் பின், நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கடந்த உள்ளாட்சி தேர்தலில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே வெற்றி பெற்றோம். இப்போது, ஆளுங்கட்சியாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 பக்க வாத்தியம்

'இப்போவே புரிஞ்சுருச்சு!'

வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதன் பின், நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கடந்த உள்ளாட்சி தேர்தலில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போதே வெற்றி பெற்றோம். இப்போது, ஆளுங்கட்சியாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட இடங்களை ஒதுக்கியுள்ளதால், மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர். நீங்கள் ஒன்றும் இதில் பிரச்னை கிளப்ப வேண்டாம்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'உள்ளாட்சி தேர்தல் எப்படி நடக்க போகுதுன்னு இப்போவே புரிஞ்சுருச்சு... 'சீட்' ஒதுக்கீட்டில், தி.மு.க., கொடுத்ததை கூட்டணி கட்சிகள் வாங்கிட்டு போயிருக்காங்க என்பதும் புரிஞ்சுருச்சு...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-செப்-202110:14:13 IST Report Abuse
M  Ramachandran இது ஒரு ரப்பர் ஸ்டாம்புங்ஹோ. டம்மி பீசு. இத்தால் ஒரு குண்டூசியை கூட நகர்த்த முடியாது. அறிக்கைகளை கைநாட்டு வைக்க மட்டும் பவர் குடுத்திருக்கங்கா. இந்த ஆளை விட உதய் நிதியின் எடுபுடிக்கு பவர் அதிககம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X