சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

திடீர் ஹீரோ!

Added : செப் 24, 2021
Share
Advertisement
திடீர் ஹீரோ!பீஹார் மாநில அரசியலில் லோக் ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன். லோக் ஜன சக்தி கட்சி, பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பின், இதில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. பீஹார்

 அக்கம் பக்கம்


திடீர் ஹீரோ!



பீஹார் மாநில அரசியலில் லோக் ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன். லோக் ஜன சக்தி கட்சி, பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பின், இதில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்த சிராக் பாஸ்வான், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் சேதத்தை
ஏற்படுத்தினார்.தேர்தலுக்குப் பின் சிராக் பாஸ்வானின் சித்தப்பா பசுபதி பரசை அங்கீகரித்த பா.ஜ., மேலிடம், அவரை மத்திய அமைச்சராகவும் ஆக்கியது; சிராக் பாஸ்வான் கழற்றி விடப்பட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமீபத்தில் சிராக் பாஸ்வானை சந்தித்து, கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். இதற்குப் பின் தான், பீஹார் அரசியலில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டன. ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் சிலர் ரகசியமாக சென்று, சிராகிடம் சமாதானம் பேசினர். பா.ஜ.,வும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சிராகிற்கு துாது விட்டு வருகிறது.
இதனால் பீஹாரில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினர் என, அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் சிராக் பாஸ்வான்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X