சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தி.மு.க.,விற்கு சொல்லி தர வேண்டுமா?

Added : செப் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தி.மு.க.,விற்கு சொல்லி தர வேண்டுமா?எம்.கோபாலன், ஆழ்வார் திருநகரி, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் துவக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு நகைக் கடன் மோசடி நடந்துள்ளதாம். அதாவது, நகைக் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., அரசின் அறிவிப்பை, அந்த வங்கி நிர்வாகத்தினர் பயன்படுத்தி, மோசடியில்


தி.மு.க.,விற்கு சொல்லி தர வேண்டுமா?


எம்.கோபாலன், ஆழ்வார் திருநகரி, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துாத்துக்குடி மாவட்டம், குரும்பூர் துவக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு நகைக் கடன் மோசடி நடந்துள்ளதாம்.
அதாவது, நகைக் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., அரசின் அறிவிப்பை, அந்த வங்கி நிர்வாகத்தினர் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே பெற்றிருந்த ஆவணங்களின்படி, பல நபர்களுக்கு நகைக் கடன் கொடுத்ததாக போலி ஆவணங்களை தயார் செய்து, பணத்தை கையாடல்
செய்துள்ளனர்.தி.மு.க., அரசியல் கட்சியாக இருந்தவரை வெறும் பொதுக் கூட்டம், நாடகம், மாநாடு, ஊர்வலம் என்ற அளவிலேயே இயங்கியது.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என கொள்கை வகுக்கப்பட்டதும், பணம் எப்படி குவிக்கலாம் என, அக்கட்சி சிந்திக்க துவங்கியது.அதில் ஒன்று தான், கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்து, 'ஆட்டையை' போடுவது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உடன், ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் தி.மு.க.,வினர் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ளப்பட்டனர். கூட்டுறவு சங்கங்கள், ஒட்டகம் தலையை நுழைத்த கூடாரம் மாதிரி ஆனது.
அதுவரையில் அந்த சங்கத்தை முறையாக நிர்வகித்து வந்த இயக்குனர்களை, சாம, தான, பேத, தண்ட முறைகளை உபயோகித்து விரட்டியடித்தது.அதாவது, 'கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற கொள்கையோடு இயங்கி கொண்டிருந்த கூட்டுறவு சங்கங்களை, 'கூட்டுறவே வீட்டுயர்வு' என
கொள்ளையடிக்க துவங்கியது.அதுவரையில் லாபத்தில் இயங்கிய கூட்டுறவு சங்கங்கள், தி.மு.க., நுழைந்த பின் நஷ்டத்தில் தள்ளாட துவங்கின.அப்படி நஷ்டத்தில் சங்கத்தை இழுத்து மூடும் நிலை வரும் போது, அரசு நிதியுதவி செய்வது வாடிக்கையாக இருந்தது.சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட முடியும். கூட்டுறவு சங்கம் இயங்கினால் தானே, இயக்குனர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை வசதியையும் பெருக்கி கொள்ள முடியும்.
தி.மு.க., ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை, எந்த கூட்டுறவு சங்கத்திற்காவது அரசு நிதியுதவி செய்திருக்கிறதா? சங்க உறுப்பினர்கள் வாங்கியிருந்த கடன்களை ரத்து செய்திருக்கிறதா?அத்தனையும், தி.மு.க., ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின் தான் நடைபெற ஆரம்பித்தன.குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி போல, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகளிலும் முறைகேடுகள் நிச்சயம் நடந்திருக்கும். அந்த மோசடி 200 கோடி ரூபாய்களையும் தாண்டி மிரள வைக்கும்.
கிடங்கில் இருப்பு வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை, எறும்பு தின்று தீர்த்ததாகவும்; அந்த சாக்குப்பைகளை கரையான் அரித்து கபளீகரம் செய்து விட்டதாகவும் கதையளந்த கட்சியான தி.மு.க.,விற்கு மோசடி செய்வது குறித்து சொல்லியா தர வேண்டும்!


அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி!க.நடராஜன், கருவம்பாளையம், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மொபைல் போனில் அழைத்து, 'டெலி மார்க்கெட்டிங்' செய்யும் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மொபைல் போன் என்பது நம் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக தான் உள்ளது. இப்படி பிறரின் வியாபாரத்திற்கு நாம் விளம்பரம் கேட்பதற்கு அல்ல. அதற்கு ஏன் நாங்கள் பணம் செலுத்தி, 'ரீசார்ஜ்' செய்ய வேண்டும்?
அவசர வேலையாக வண்டியில் செல்லும்போது, மொபைல் போன் ஒலிக்கும். போக்குவரத்து நெரிசலை கடந்து, வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி பேசினால், 'சார் லோன் வேணுமா? இன்சூரன்ஸ் போடறீங்களா... கார் வாங்கறீங்களா...' இப்படி கேட்டால் எப்படி எரிச்சல் வரும்! இப்படி வரும் அழைப்புகளை வாகனத்தை ஓட்டியபடியே பேசினால், விபத்தில் சிக்க நேரிடுகிறது அல்லது போலீசாருக்கு அபராதம் செலுத்த
வேண்டும்.'டெலி மார்க்கெட்டிங்' என்பது, மக்களின் சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகும். நாட்டில் பல ஆயிரக்கணக்கானோர் தொழில் செய்கின்றனர். அவர்கள் அனைவரும், இப்படி டெலி மார்க்கெட்டிங் செய்தால், நாம் மொபைல் போனில் 24 மணி நேரமும் பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
டெலிமார்க்கெட்டிங் செய்யும் பெண்களை திட்ட முடியவில்லை.பாவம், அவர்கள் வாங்கும் சொற்ப சம்பளத்திற்காக நம்மிடம் திட்டு வாங்குகின்றனர்.பத்திரிகை, சமூக வலைதளம், 'டிவி' என, விளம்பரம் செய்ய பல வழிகள் உள்ளன. அதை விடுத்து, தனிநபர் உரிமையில் வியாபார நிறுவனங்கள் தலையிடுவது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த அடாவடித்தனத்தை, அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.


ஒடுக்குவதின் பயன்!கு.நாகராஜ், சக்கம்பட்டி, தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீப காலமாக ஹிந்து பண்டிகை வரும் போதெல்லாம் பலரும், 'கருத்து கந்தசாமி'களாய் மாறி வரும் போக்கு அதிகரித்து வருகிறது.திடீரென சுற்றுச்சூழல் மீது அக்கறை உடையவராக மாறி விடுவர். புகை கக்கும் வாகனத்தில் தான் பயணம் செல்வர்; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவர்; ஒரு மரம் கூட நட்டு வளர்த்திருக்க
மாட்டார்கள்.ஆனால், ஹிந்து பண்டிகை வரும் போது மட்டும் சுற்றுச்சூழல் மீது ரொம்ப அக்கறை வந்து, கருத்து கூற ஆரம்பித்து விடுவர்.'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்பான் வள்ளுவன். அது செயல் வடிவம் பெறுவது எல்லாம் ஹிந்து பண்டிகையால் தான்.ஒரு பண்டிகையை முன்னிறுத்தி, பல தொழில் புரிவோரின் வாழ்வாதாரம் மேன்மை அடைகிறது.பூ, பழம் விளைவிப்பவர், அவற்றை விற்பனை செய்பவர், களிமண் பொம்மை செய்பவர், பட்டாசு தயாரிப்பவர் என ஒரு பண்டிகையை சுற்றி பல தொழில்கள் சிறக்கின்றன.
ஆட்சியாளர்களால் புதிய தொழில் துவங்கி, மக்களுக்கு வேலை வாய்ப்பு தான் வழங்க முடியாது. பண்டிகைக்கு தடை விதித்து, இருக்கும் தொழில்களை அழிக்காமல் இருக்கலாமே.பண்டிகைக்கு தடை விதிக்க கொரோனாவை காரணம் காட்டும் அரசு, பாதிக்கப்படும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்திற்கு மாற்று வழியை கூற வேண்டும்.ஹிந்து பண்டிகையை ஒடுக்குவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்களை சேர்த்தே அரசு ஒடுக்குகிறது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-செப்-202115:31:34 IST Report Abuse
D.Ambujavalli ஆமை புகுந்த வீடு என்பது போகப்போக தெரியும் ஒவ்வொரு துறையிலும் எத்தனை ஆயிரம் கோடிகள் கபளீகரம் ஆகப்போகிறதோ அடுத்த வெள்ளை அறிக்கையில் நம் கடனை பத்து லட்சம் ஆக்கிவிடுவார்கள்
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
25-செப்-202111:43:10 IST Report Abuse
veeramani ஒரு சயின்டிஸ்ட்டின் கருத்து பண்டிகை காலம் இனிமையானது தான். சுற்றுசூழல், மக்களை நினைத்து பல காரியங்கள் செய்தல் நலம்பயக்கும். காற்று மாசு-பட்டாசுகளால் உருவாகும் மாசுகளை சுத்தமாக நீக்குவதற்கு நான்கு வாரங்கள் தேவைப்படுகிறது. பட்டாசு உற்பத்தியாளர்கள் இதற்கு பொறுப்பு ஏற்பார்களா?? இதேபோல் பலப்பல சொல்லலாம்.மக்களின் வாழ்வுஆதாராம் என சொல்வதால் பலனில்லை. கடந்த ஆப்ரில், மே, ஜூன் மாதங்களில் உயிர்வாழ் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - மறக்க இயலுமா??? மனித குளம் வாழ சில தியாகங்கள் செய்யதான் வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X