பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021
Share
Advertisement
செப்., 25, 1899திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி கிராமத்தில், 1899 செப்., 25ம் தேதி பிறந்தவர், நாராயணசாமி. இளம் வயதில் பெற்றோரை இழந்ததால், நான்காம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. 'ஆரிய கான சபா' நாடகங்களில் நடித்தும், எழுதியும், பாடியும் வந்தார்.ஆரம்ப காலத்தில் ஆன்மிக பாடல்கள் எழுதி வந்தவர், மகாகவி பாரதியாரின் நட்புக்கு பின் பாமர மக்களிடையே
 இதே நாளில் அன்று


செப்., 25, 1899


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி கிராமத்தில், 1899 செப்., 25ம் தேதி பிறந்தவர், நாராயணசாமி. இளம் வயதில் பெற்றோரை இழந்ததால், நான்காம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. 'ஆரிய கான சபா' நாடகங்களில் நடித்தும், எழுதியும், பாடியும் வந்தார்.ஆரம்ப காலத்தில் ஆன்மிக பாடல்கள் எழுதி வந்தவர், மகாகவி பாரதியாரின் நட்புக்கு பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல்களையும், சுதந்திர உணர்ச்சியை துாண்டும் பாடல்களையும் எழுதினார்.கடந்த 1933 முதல், படங்களுக்கு பாடல்கள் எழுதினார். தன் பெயரை, 'நாராயணகவி' என மாற்றிக் கொண்டார். வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, மனோகரா, பராசக்தி உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில், ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார். 1981 மே 23ம் தேதி தன் 82வது வயதில் காலமானார். இவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
'கவிராயர்' உடுமலை நாராயணகவி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X