மோடி - ஜோ பைடன் சந்திப்பு : இரு தரப்பு உறவு பற்றி ஆலோசனை

Updated : செப் 25, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (90) | |
Advertisement
வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.'குவாட்' மாநாடு மற்றும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்காக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு நேற்று சென்றார். பிரதமராக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கு
பைடனை சந்திக்க வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.'குவாட்' மாநாடு மற்றும் ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்காக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு நேற்று சென்றார். பிரதமராக பதவியேற்ற பின் அமெரிக்காவுக்கு ஏழாவது முறையாக மோடி சென்றுள்ளார். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின், அவரை தற்போது தான் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது, ஜோ பைடனிடம் மோடி கூறியதாவது:
அமெரிக்காவின் முன்னேற்றத்தில் இந்திய வம்சாவளியினர் பெரும் பங்காற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் 1௦ ஆண்டுகளில் உலகம் எப்படியிருக்கும் என்பதை உங்கள் தலைமை வடிவமைக்கும் என நம்புகிறேன். இந்திய - அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தவதற்கான விதைகள் ஊன்றப்பட்டுள்ளன. இப்போது உலகை வழிநடத்தும் சக்திகளில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருகிறது; இதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய - அமெரிக்க உறவில் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை மேலும் மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்பது உறுதி. இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயம் துவக்கப்பட்டுள்ளது. கொரோனா, தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றின் சவால்களையும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் வளர்ச்சிப் பணியில் ௪௦ லட்சம் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
'குவாட்' அமைப்பு முக்கியத்துவம் இழக்கும்?இந்தோ -- பசிபிக் கடலில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, ஏ.யு.கே.யு.எஸ்., என்ற, 'ஆகுஸ்' பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் கீழ் அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து 12 அணு நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க உள்ளன. இக்கப்பல்கள் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இதே கடல் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, 'குவாட்' என்ற அமைப்பின் கீழ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகியவை ஒன்றிணைந்து உள்ளன.அப்படியிருக்கையில், அதே பிராந்தியத்தில் இந்தியா, ஜப்பானை தவிர்த்து மேலும் ஒரு அமைப்பு எதற்கு என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.இது குறித்து, வெளியுறவு விவகாரத்துறை நிபுணரும், எழுத்தாளருமான பிரம்மா செல்லானே கூறியதாவது:


latest tamil news


'ஆகுஸ்' என்ற இந்த அமைப்பு உருவாகி இருப்பதால், 'குவாட்' அமைப்பின் முக்கியத்துவம் நாளடைவில் வலுவிழக்கும். அமெரிக்காவுடனான உறவில், ஆஸ்திரேலியா அனுபவிக்கும் பலன்கள் அனைத்தும், இந்தியா மற்றும் ஜப்பானுக்கு கிடைக்காமல் போகும்.
இந்த இருநாடுகளின் முக்கியத்துவம் குறையும். அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட உறவை பேணும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும். மேலும், இந்த புதிய அமைப்பின் வாயிலாக அஸ்திரேலியாவில் இருந்து லாபகரமான ராணுவ ஒப்பந்தங்கள் அமெரிக்காவுக்கு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவைப் போல இந்தியாவும் மிகப் பெரிய சக்தியாக உருவாகி விட கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அமெரிக்காவுக்கு இருப்பதாலேயே, இது போன்ற தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
25-செப்-202120:19:31 IST Report Abuse
SUBBU போலி பெயரில் கருத்து போடும் மூர்க்கனுங்க எல்லாம் வயிரெறிஞ்சு சாவுங்கடா.2024 ம் மோடிதான் பிரதமர் இதை புரிந்து கொண்டு இங்கிருக்கும் பாவாடைகளும், லுங்கிகளும் வாலை சுருட்டிக் கொண்டு இருந்தால் உங்களுக்கு நல்லது.இல்லையென்றால் உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டு கொள்வதற்கு சமம்.இதற்கு மேல் ஒங்களுக்கு சுருங்க சொல்லி விளங்க வைக்க முடியாது.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
25-செப்-202119:47:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மூர்க்கன்ஸ் தாழ்வு மனப்பான்மை இருக்கும் மூர்க்கன்ஸ், பொறாமைத் தீயில் வெந்து மாயும் மூர்க்கன்ஸ் இங்கே கும்மி அடித்திருப்பதை பார்த்தால் சந்திப்பு இரு நாடுகளுக்கும் சாதகமானதாகவே தெரிகிறது
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
25-செப்-202122:37:52 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     மேதாவி என்ன சொல்ல அசிங்கப்பட்டார் மோடி , அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை , trump இருந்த போது கொடுத்த அளவுக்கு இவர்க்கு இங்கு வரவேற்க வைக்கப்படவில்லை , கமலா HAARIS பயங்கரவாதம் பற்றி LECTURE ஏன் PIDEN இவர் சேயும் மதவாதம் பற்றி சொல்லி GANDHI கொள்கை FOLLOW பண்ண சொல்லி உள்ளார்...
Rate this:
Cancel
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
25-செப்-202116:33:57 IST Report Abuse
பெரிய குத்தூசி அமெரிக்கா ஒரு குள்ளநரி, சீனாவை ஒருபோதும் அமெரிக்கா பகைத்து கொள்ளாதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X