அமெரிக்காவை வலுப்படுத்தும் இந்தியர்கள் : ஜோ பைடன்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
வாஷிங்டன்: 4 மில்லியன் இந்தியர்களால் அமெரிக்கா வலுவடைந்துள்ளது என அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பெருமிதத்துடன் கூறினார்.குவாட் மாநாட்டில் பங்கேற்க வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி நேற்று (செப்.23) அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.இந்த சந்திப்பு

வாஷிங்டன்: 4 மில்லியன் இந்தியர்களால் அமெரிக்கா வலுவடைந்துள்ளது என அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பெருமிதத்துடன் கூறினார்.latest tamil news


குவாட் மாநாட்டில் பங்கேற்க வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி நேற்று (செப்.23) அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.


latest tamil news


இந்த சந்திப்பு குறித்து ஜோ பைடன் கூறியது,இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், முதலில் நாம் சந்திக்க வேண்டிய சவாலாக உள்ளது கோவிட் தான். 4 மில்லியன் இந்தியர்களால் அமெரிக்கா வலுவடைந்துள்ளது.உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க இந்திய உறவு எங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் கடந்த 2006 ம் ஆண்டில் துணை ஜனாதிபதியாக இருந்த போது 2020 ம் ஆண்டிற்குள் இந்தியாவும் அமெரிக்காவும் நெருககமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான சொன்னேன் .இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

This morning I'm hosting Indian Prime Minister Narendra Modi at the White House for a bilateral meeting. I look forward to strengthening the deep ties between our two nations, working to uphold a free and open Indo-Pacific, and tackling everything from COVID-19 to climate change.

— President Biden (@POTUS) September 24, 2021latest tamil newsமுன்னதாக வெள்ளை மாளிகையில் தனக்கு வரவேற்பு அளித்த பைடனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் அமெரிக்காவுடன் புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது.ஜனாதிபதி ஜோ பிடன் காந்தி ஜெயந்தியைக் குறிப்பிட்டார். காந்தி அறக்கட்டளை பற்றி பேசினார் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-செப்-202109:56:38 IST Report Abuse
R.Kumaresan வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் காலத்தில்தான் அமெரிக்காவில் election நடந்தது உலகம் முழுவதும் ஒருவருடத்திற்கு மேலாக வைரஸ் தொற்று பரவல் பரவிக்கொண்டு இருந்துகொண்டிருக்கிறது அமெரிக்கா ஜனத்தொகையைவிட இந்தியமக்கள்தொகைதான் அதிகமிருக்கும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.. வைரஸ், வைரஸ் தோற்றுநோய்பரவல் தற்போது உலகநாடுகளில் முழுவதும் நிற்பதற்கு வாய்ப்பில்லை..
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
25-செப்-202105:15:52 IST Report Abuse
meenakshisundaram இந்த உறவுக்கும் முக்கிய காரணம் திமுகவே .அன்று 'வாழும் வள்ளுவன் '(?) கருணாநிதி பிராமணர்களை ஒதுக்கும் வேலையை ஆரம்பிச்சு வைக்காட்டா இவ்வளவு பிராமணர்களும் அதை பார்த்து மற்ற ஜாதிக்காரனுங்களும் அங்கே போயி செட்டில் ஆகியிருப்பாங்களா ?தாங்களும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றிய அந்த இந்தியர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி தகுந்த புகழுரையை கொடுத்துள்ளார் -பிராமணர்களுக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர் 'உறுதி படுத்தப்பட்டுள்ளது .கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பே
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-செப்-202100:05:23 IST Report Abuse
J. G. Muthuraj .இந்தியாவில் எடுக்கப்படும் அனைத்து அரசியல், சமூக பொருளாதார தீர்மானங்களையும் அவைகளை நிறைவேற்றும் முறை பற்றியம் மேலை நாட்டு அரசுகளுக்கு நன்கு தெரியும்..... வலிமை, ஒற்றுமை, ஒருமைப்பாடு கொண்ட இந்தியாவை கட்டி எழுப்புங்கள்.....பார்லிமென்ட் ஜனநாயகம், மக்கள் நீதி சமத்துவம் இவைகளை நிலைநாட்டுங்கள்.....பிரிவினை சக்திகளை விரட்டி அடியுங்கள்.....நிச்சயம் வெளியில் இந்தியாவிற்கு உரிய மரியாதை கிடைக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X