புத்தர் சிலை, மயில் கப்பல், சதுரங்கம்; தலைவர்களுக்கு மோடி அளித்த சிறப்பு பரிசுகள்

Updated : செப் 24, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் தலைவர்களுக்கு அளித்த வித்தியாசமான பரிசுகள் வைரலாகி வருகின்றன. இந்த சந்திப்பின்போது ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிஸன் உள்ளிட்டோரும் அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்தது

வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் தலைவர்களுக்கு அளித்த வித்தியாசமான பரிசுகள் வைரலாகி வருகின்றன.latest tamil newsஇந்த சந்திப்பின்போது ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிஸன் உள்ளிட்டோரும் அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக உலக நாடுகளுக்கு செல்லும்போது அந்த நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வித்தியாசமான பரிசுகளை அளிப்பது வழக்கம்.

இதேபோல தற்போது இந்திய வம்சாவளி கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி பரிசு ஒன்றை அளித்துள்ளார். 1966 ஆம் ஆண்டு கமலாவின் தாய்வழி பாட்டனார் கோபாலன் மத்திய அரசு பணியில் இருந்தபோது அரசு ஆவணத்தில் அரசு ஊழியராகிய அவரது பெயர் பதிவாகியிருந்தது.

இதனைத் தேடி கண்டுபிடித்து அந்த பக்கத்தை கண்ணாடி பிரேம் இட்டு அதனை பேத்தியான கமலா ஹாரிஸுக்கு நினைவுப் பரிசாக அளித்துள்ளார் மோடி. மேலும் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் செய்யப்பட்ட மார சதுரங்க சிப்பாய்கள் கொண்ட சதுரங்க விளையாட்டு போர்டையும் பரிசளித்தார்.


latest tamil newsஇதேபோல ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு சந்தன மரத்தால் ஆன நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட புத்தர் சிலையை பரிசளித்துள்ளார். காலகாலமாக ஜப்பான்-இந்தியா ஆகிய இரு நாடுகளின் கலாச்சாரத்தை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது பௌத்தமதம். இதனை குறிக்கும் வகையில் இந்த பரிசு அவருக்கு அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிஸனுக்கு மோடி காசியில் உருவாக்கப்பட்ட இந்திய பாரம்பரியத்தை குறிக்கும் சிறிய மயில் போன்ற முகப்புடைய கப்பலை பரிசாக அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prema KKMV - Hyderabad ,இந்தியா
25-செப்-202108:44:39 IST Report Abuse
Prema KKMV even gifting to whom , what , needs lots of thought process ..... Hon PM ,Modi Sir gifting people beautiful things Just he is awesome person , leader , human being ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X