பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றால் உயிரிழப்பு ரேஷன் ஊழியருக்கு ரூ.25 லட்சம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா தொற்றால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 25 லட்சம் ரூபாய் வழங்க, அவர்களின் விபரங்களை அனுப்புமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவுத் துறையின் கீழ் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், கொரோனா ஊரடங்கு நேரத்திலும் வேலைக்கு

சென்னை:கொரோனா தொற்றால் உயிரிழந்த ரேஷன் ஊழியர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 25 லட்சம் ரூபாய் வழங்க, அவர்களின் விபரங்களை அனுப்புமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், கொரோனா ஊரடங்கு நேரத்திலும் வேலைக்கு வந்து பொருட்களை வழங்கினர். இதனால், தொற்று பாதித்து சில ஊழியர்கள் உயிரிழந்தனர்.அவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 25 லட்சம் ரூபாய் வழங்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

உயிரிழந்த ஊழியர்கள், பணியில் ஈடுபட்ட சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று, கொரோனா தொற்றால் இறந்தார் என்பதற்கான மருத்துவ சான்று உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய முன்மொழிவு விபரங்களை அனுப்புமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க இருப்பதை வரவேற்கிறோம். அந்த தொகையை விரைந்து வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலையும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X