சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திடீர் இயந்திர கோளாறு விமானம் தரையிறக்கம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில் இருந்து நேற்று காலை, 117 பயணியர் உட்பட 123 பேருடன் அந்தமான் சென்ற, 'ஏர் இந்தியா' விமானத்தில், நடுவானில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் தரை இறங்கியது.சென்னையில் இருந்து அந்தமானுக்கு நேற்று காலை 8:40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 117 பயணியர், ஆறு ஊழியர்கள் உட்பட 123 பேர் பயணித்தனர். நடுவானில் பறந்தபோது விமானத்தில் திடீரென

சென்னை:சென்னையில் இருந்து நேற்று காலை, 117 பயணியர் உட்பட 123 பேருடன் அந்தமான் சென்ற, 'ஏர் இந்தியா' விமானத்தில், நடுவானில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் தரை இறங்கியது.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு நேற்று காலை 8:40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 117 பயணியர், ஆறு ஊழியர்கள் உட்பட 123 பேர் பயணித்தனர். நடுவானில் பறந்தபோது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தை சென்னைக்கு திரும்ப அறிவுறுத்தினர்.

அவசரமாக தரை இறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து, காலை 9:40 மணிக்கு விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரை இறங்கியது. மாற்று விமானத்தில் பயணியரை அந்தமானுக்கு அனுப்ப, ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X