வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வோம்!

Added : செப் 24, 2021
Share
கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன்: ஒரு பாடகியாக தொடர்ந்து புகழ் வெளிச்சத்தில் இருப்பது சாதாரண விஷயமல்ல. நன்றாக உடுத்தணும். மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்கணும். மனதோ, உடம்போ ஒத்துழைக்காமல் இன்று பாட விருப்பமில்லை என 'எக்ஸ்கியூஸ்' சொல்லவும் முடியாது.மீடியாவின் வெளிச்சம், மக்களுடைய கவனம் என பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த எனக்கு 2015-ல் ஒரு தடை ஏற்பட்டது. 'ஆசிட்
சொல்கிறார்கள்

கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன்: ஒரு பாடகியாக தொடர்ந்து புகழ் வெளிச்சத்தில் இருப்பது சாதாரண விஷயமல்ல. நன்றாக உடுத்தணும். மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்கணும். மனதோ, உடம்போ ஒத்துழைக்காமல் இன்று பாட விருப்பமில்லை என 'எக்ஸ்கியூஸ்' சொல்லவும் முடியாது.மீடியாவின் வெளிச்சம், மக்களுடைய கவனம் என பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த எனக்கு 2015-ல் ஒரு தடை ஏற்பட்டது. 'ஆசிட் ரெப்ளெக்ஸ்' எனும், அமிலப் பின்னோட்ட பாதிப்பு வந்தது.அதாவது சாப்பாட்டில் உள்ள அமிலம் தொண்டையை நோக்கி வரும். அதனால் வழக்கம் போல பாட முடியலை. '30 ஆண்டு பாடிட்டீங்க. இப்போ கொஞ்சம் ஓய்வு அவசியம்'னு மருத்துவர்கள் கூறினர். அந்தாண்டு டிசம்பர் சீசனை, ரசிகர்களை ரொம்ப 'மிஸ்' பண்ணினேன். ஆனாலும், அதை மன அழுத்தமாக எடுத்துக்காம எனக்களித்த விடுமுறையாக நினைத்துக் கொண்டேன்.பலரும் பலவிதமாக பேசினர். எதையும் நான் கண்டுக்கொள்ளவில்லை. என் பிரச்னையிலேருந்து வெளியே வர ஆறு மாதம் ஆனது. என் திறமை மற்றும் இந்த துறையில் எனக்கான இடத்தின் மேல் நம்பிக்கை இருந்தது. சில பத்திரிகைகளில் எனக்கு ஏற்பட்ட பாதிப்பையும், அதனால் 'பிரேக்' எடுத்திருந்ததையும் எழுதினர். அதை பார்த்து பல பாடகர்களும் தங்களுக்கும் அதே பிரச்னை இருப்பதாக வெளியே சொல்ல ஆரம்பித்ததுடன், அதிலிருந்து வெளியே வர 'அட்வைசும்' கேட்டனர்.அடுத்தவர்கள் தவறாக பேசுவதை கண்டு பயந்து முடங்கவில்லை. என் மனநிலையை கட்டுப்பாட்டுடன் வைத்து கொண்டேன். என் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்ததால் அந்த தற்காலிக இடைவெளி, மன அழுத்தமாக மாறாமல் தப்பிக்க முடிந்தது.தலைவலி, வயிற்றுவலி, துாக்கமின்மையை எல்லாம் ஏற்கும் நாம், மன அழுத்தம் இருப்பதை மட்டும் ஏன் மறைக்கணும்?தனிமை, சோர்வு, துாக்கம் வராதது அல்லது எப்போதும் துாக்கம், யாருடனும் பேசப் பிடிக்காதது, யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, அடுத்தவர்கள் நன்றாக இருப்பதை பிடிக்காமல் வருத்தப்படுவது... இதெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள்.இவ்வாறு இருந்தால், மருத்துவ ஆலோசகரை சந்திப்பதில் தப்பில்லை. நமக்கான சந்தோஷத்தை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். அப்படி நம்மால் உருவாக்க முடியாத நிலையில் மற்றவர்களின் உதவியை நாடுவதில் தப்பே இல்லை. வாழ்வது ஒருமுறை... அதை சிறப்பாக வாழ்வோம்!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X