அரசியல் செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை :தயார் நிலையில் இருக்க முதல்வர் அறிவுரை

Updated : செப் 26, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை :''வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து துறைகளும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.உயிர் காக்கும் மருந்துகள்சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அதில், முதல்வர்
வடகிழக்கு ,பருவ மழை முன்னெச்சரிக்கை, தயார் நிலை, முதல்வர் அறிவுரை

சென்னை :''வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து துறைகளும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.உயிர் காக்கும் மருந்துகள்சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில், முதல்வர் பேசியதாவது:பேரிடர் காலங்களில் அரசு துறைகள் தனித்தனியாக இயங்காமல், ஒன்றாக இணைந்து இயங்க வேண்டியது மிகவும் அவசியம். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

குடிநீர், தரமான உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால், ரொட்டி போன்றவற்றை வழங்க வேண்டும்.அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருப்பதை இப்போதே உறுதி செய்ய வேண்டும்.தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய் பரவலைத் தடுக்கவும் வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள், போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
நடவடிக்கைகொரோனா நோய் தடுப்பு நடைமுறைகள் தவறாது பின்பற்றப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.மாவட்ட கலெக்டர்கள், கன மழை, புயல் ஆகியவற்றின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கன மழையால் கிடைக்கும் தண்ணீர் வீணாகாமல், குளங்கள், ஏரிகள் போன்றவற்றின் நீர்வழிக் கால்வாய்களில் சேமித்து வைப்பதற்கும் செயல் திட்டம் வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்கசெல்லும் மீனவர்களுக்கு, புயல், கன மழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை, தகவல் தொடர்பு சாதனங்கள் வழியே உடனுக்குடன் அனுப்ப வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.கூட்டத்தில், அமைச்சர்கள் வேலு, சாத்துார் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, சுப்பிரமணியன், தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்றனர்.


கள ஆய்வு!மழை முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்ய, முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.மழை காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மழைக்கு முன்பாக, இம்மாவட்டங்களில் உள்ள கூவம், அடையாறு, கொசஸ்தலை, வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகள் உட்பட பல்வேறு நீர்வழித் தடங்கள் துார் வாரப்படுகின்றன.
நாளை, சென்னையில் எம்.ஆர்.சி.நகர், மத்திய கைலாஷ், வேளச்சேரி, நாராயணபுரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவர் பார்வையிட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-செப்-202114:48:52 IST Report Abuse
S.Baliah Seer வரவேற்க வேண்டிய நல்ல செயல். சென்னையின் தெற்குப்பகுதி கார்ப்பரேஷன் எல்லை நீண்டு கொண்டே போகையில் மேற்குப்பகுதி அம்பத்தூரை தாண்டக்கூட இல்லை.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-செப்-202114:01:23 IST Report Abuse
அசோக்ராஜ் //"அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருப்பதை இப்போதே உறுதி செய்ய வேண்டும்"// முக்கியமான ஆப்பர்சூனிடியை விட்டுட்டீங்களே? சூரியன் லோகோவுடன் கருப்பு சிவப்பு கலரில் ஒரு ஜோடி விலையில்லா குடைகள் ரேஷன் கடை மூலம் விநியோகிச்சா உள்ளாட்சி ஓட்டு கணக்கு எகிறுமே? நம்ம பாக்கெட்டும் நிரம்புமே? திராவிஷனுக்கு இதெல்லாம் சொல்லியா தெரியணும்?
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-செப்-202110:59:58 IST Report Abuse
Duruvesan யேசப்பாவின் சீடர் ஸ்டாலின் ஆட்சியில் மழை வெள்ளம் வராது, பாலும் தேனும் வீதி எங்கும் பெருக்கீடுத்து ஓட பாதிரி நாட்டில் ஸ்டாலின் விடியல் கொடுத்து உள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X