பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 2 நாளில் 24.60 லட்சம் தடுப்பூசி

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்திற்கு மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாமுக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வருகிறது. அதன்படி நேற்று 7.60 லட்சம் உட்பட, இரண்டு நாட்களில் 24.60 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழகத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட மையங்களில், தினசரி 3 - 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர, தமிழக அரசு இரண்டு கட்டமாக மாபெரும்

சென்னை:தமிழகத்திற்கு மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாமுக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வருகிறது. அதன்படி நேற்று 7.60 லட்சம் உட்பட, இரண்டு நாட்களில் 24.60 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட மையங்களில், தினசரி 3 - 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர, தமிழக அரசு இரண்டு கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம்களை நடத்தியுள்ளது. முதற்கட்ட முகாமில் 28.91 லட்சம் பேருக்கும், இரண்டாவது முகாமில் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதைதொடர்ந்து, நாளை மூன்றாவது கட்ட முகாம் நடக்கிறது. இதில் 20 ஆயிரம் இடங்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்காக கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதன்படி, நேற்று முன்தினம் தமிழகத்திற்கு 17 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து ஏழு லட்சம், 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் நேற்று சென்னை வந்தன.

அதேபோல், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் இருந்து 60 ஆயிரத்து 410 'கோவாக்சின்' தடுப்பூசிகள் வந்துள்ளன.இதன் வாயிலாக, இரண்டு நாட்களில் 24.60 லட்சம், 'டோஸ்' தடுப்பூசி களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. எனவே, நாளைய முகாமில் இலக்கை விட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசிகள் செலுத்த, சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X