அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய் பேசுகிறார் பழனிசாமி தங்கம் தென்னரசு பாய்ச்சல்

Added : செப் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:''தி.மு.க., ஆட்சி மீது, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்,'' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. சில திட்டங்கள், அ.தி.மு.க.,ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்; அவற்றை திறந்து வைப்பதாக, அடிக்கல் நாட்டுவதாக, எதிர்க்கட்சித் தலைவர்

சென்னை:''தி.மு.க., ஆட்சி மீது, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்,'' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. சில திட்டங்கள், அ.தி.மு.க.,ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்; அவற்றை திறந்து வைப்பதாக, அடிக்கல் நாட்டுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.தி.மு.க., அரசு பதவி ஏற்றதும், 'ரேஷனில் தலா 4,000 ரூபாய் கொரோனா நிதியுதவி; ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்' ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

மக்கள் மனுக்கள் மீது தீர்வுகாண, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை துவக்கம்;தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டார்.இதில் நான்கு, தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவை. இதை, பழனிசாமி மறந்து விட்டார். மேலும் அவர், தொழில் துறையில் அவர்கள் ஆட்சியில் வந்த தொழில் முதலீடுகளை வைத்து, தற்போது திட்டம் வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் அவர்கள் கூறிய முதலீட்டில், 20 சதவீதம் கூட வரவில்லை. அவர் பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார். நாங்கள் கூறிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சி முறைகேடுகளை மறைக்க, தி.மு.க., மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


'போர்டு' தொழிற்சாலை:அரசு முடிவு என்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள 'போர்டு கார்' தொழிற்சாலையை மூடப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'இவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?'என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கேட்டபோது, ''போர்டு கார் தொழிற்சாலை விவகாரத்தை, அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதல்வர் உரிய நேரத்தில், உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-செப்-202116:27:50 IST Report Abuse
BASKAR TETCHANA தி.மு.க. என்ற கட்சியில் மூன்று பேர்கள் உண்மையை தவிர வேறு யாரும் பொய் பேச தெரியாது. பொய் என்றால் என்ன கிலோவிலை என்ன என்று கேட்பவர்கள் தான் தங்கம் தென்னரசு அவனது மகள் நீதிபதிகளுக்கே பிச்சை போட்டான் ஒருத்தன் இவர்கள் தான்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
25-செப்-202108:58:09 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த பழனிசாமிக்கு அ.தி.மு.க.குண்டர்கள் கூட்டுறவு சங்கங்களில் மோசடியாக பெற்ற கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட வேண்டும்.அதனை செய்யாததால் எதையோ உளறி கொண்டுள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X