அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா இறப்பு சான்று: அரசுக்கு பன்னீர் கோரிக்கை

Updated : செப் 26, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 'கொரோனாவால் இறந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில், இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். தொற்று உறுதி
கொரோனா இறப்பு சான்று: அரசு,பன்னீர் கோரிக்கை

சென்னை : 'கொரோனாவால் இறந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில், இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டோரின் குடும்பத்திற்கும் இந்த இழப்பீடு பொருந்தும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் முடிவுக்கு நன்றி.

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாக தகவல்கள் வந்தபோது, தமிழக அரசு எந்தவிதமான நிவாரணமும் வழங்காத நிலையில், அதை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவருக்கும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

தற்போது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை உருவாகி விட்டது.கொரோனாவால் இறந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடையும் வகையில், ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
25-செப்-202112:03:47 IST Report Abuse
sankar தான் ஒருவன் இருப்பதை தினமும் காட்டிக்கொள்கிறார். மக்கள் தன்னை மறந்து விடுவார்களோ என்று அச்சம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-செப்-202106:04:03 IST Report Abuse
Kasimani Baskaran சமச்சீர், சமூக நீதி போன்ற கோமாளித்தனங்களால் தமிழகத்தின் கல்வித்தரம் கேவலமான நிலையில் இருக்கிறது. 10 ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளில் தோல்வியால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். போதாக்குறைக்கு நீட்டை இரத்து செய்வோம் என்று பொய் சொல்லி, பயம்காட்டி பலர் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X