பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் சந்திப்பு கூட்டம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஸ்டேட் பாங்க்கில் விவசாயிகள் சந்திப்புக் கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு, சேலம் மண்டல துணை பொது மேலாளர் பிரசன்னகுமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல வணிக பிரிவு மேலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி கிளை மேலாளர் கண்ணன் வரவேற்றார்.சேலம் முதன்மை மேலாளர் ஸ்ரீதர், சேலம் விவசாய தொழில்நுட்ப அலுவலர் சங்கர்,

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஸ்டேட் பாங்க்கில் விவசாயிகள் சந்திப்புக் கூட்டம் நடந்ததுகூட்டத்திற்கு, சேலம் மண்டல துணை பொது மேலாளர் பிரசன்னகுமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல வணிக பிரிவு மேலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி கிளை மேலாளர் கண்ணன் வரவேற்றார்.சேலம் முதன்மை மேலாளர் ஸ்ரீதர், சேலம் விவசாய தொழில்நுட்ப அலுவலர் சங்கர், கள்ளக்குறிச்சி சேவைப்பிரிவு மேலாளர் ராஜாமணி ஆகியோர் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, அசகளத்துார், சின்னசேலம், திருக்கோவிலுார், திருப்பாலப்பந்தல், மணலுார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கடன் பெற்ற விவசாய வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஸ்டேட் பாங்க் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் மற்றும் திட்ட விபரங்கள், விவசாய வாராக்கடன்களை புதுப்பித்து, மறுகடன்கள் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.முன்னதாக 1,000 ரூபாய் காப்பீடு செய்து, 5 மாதத்தில் விபத்தில் இறந்த வாணியந்தல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 35; என்பவரின் மனைவி சிவசக்தியிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X