கிரைம் செய்திகள்...

Added : செப் 24, 2021
Share
Advertisement
வாலிபர் தற்கொலைவானுார்: கிளியனுார் அடுத்த காரட்டையைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் அருண், 22; இவர் சில தினங்களாக வேலைக்குச் செல்லாமல், குடித்து விட்டு வந்துள்ளார். கடந்த 22ம் தேதி அவர் குடித்து விட்டு வந்த அவரை, அவரது தாய் கண்டித்தார். இதனால், மனமுடைந்த அருண், வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து

வாலிபர் தற்கொலை

வானுார்: கிளியனுார் அடுத்த காரட்டையைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் அருண், 22; இவர் சில தினங்களாக வேலைக்குச் செல்லாமல், குடித்து விட்டு வந்துள்ளார். கடந்த 22ம் தேதி அவர் குடித்து விட்டு வந்த அவரை, அவரது தாய் கண்டித்தார். இதனால், மனமுடைந்த அருண், வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மது பாட்டில் கடத்தியவர் கைது

வானுார்: நாவற்குளம் பகுதியில் ஆரோவில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் 48 குவாட்டர் பாட்டில்களை, வானுார் பகுதியில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஆதரவாளர்களுக்கு விநியோகிக்க கடத்திச் சென்ற புதுச்சேரி, முதலியார்பேட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 43; என்பவரை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

பெண் மானபங்கம்: வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: மேலமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது 23 வயது மகள் விழுப்புரம் ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி வேலை முடிந்து இரவு 9:30 மணியளவில் மேலமங்கலம் காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் பிரகாஷ், 28; தகராறு செய்து மானபங்கம் செய்துள்ளார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணல் கடத்திய மூவர் கைது

விழுப்புரம்: வளவனுார் இன்ஸ்பெக்டர் தீபா, அரசமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, சி.கே., குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ராசு, 41; ராமு, 39; திருமூர்த்தி, 25; ஆகியோரை கைது செய்தனர்.

ஆடு திருடிய இருவர் கைது

செஞ்சி: தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் 41; நேற்று அதிகாலை 2:00 மணிக்கு அவர் வளர்க்கும் ஆடுகளுக்கு தண்ணீர் வைக்க பட்டிக்குச் சென்றார். அங்கு 10 ஆடுகளில் 2 ஆடுகளைக் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை செஞ்சியில் நடந்த வார சந்தைக்குச் சென்ற குமரன், ஆடு விற்பனைக்கு கொண்டு வருபவர்களை கண்காணித்தார். அப்போது, திண்டிவனம் அடுத்த வி.பாஞ்சாலத்தைச் சேர்ந்த செபஸ்டின் மகன் அகஸ்டின், 30; நல்லாவூர் நடராஜன் மகன் விக்னேஷ், 19; ஆகியோர் குமரனின் 2 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். உடன் பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து செஞ்சி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து, பைக்கை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.பணத் தகராறு:

மூவர் மீது வழக்கு

திருவெண்ணெய்நல்லுார்: டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாஷா, 58; இவர், தனது உறவினரான திருவண்ணாமலையைச் சேர்ந்த ேஷக்தாஷிக்கிடம் கடனாக ஒரு லட்சம் ரூாபாய் வாங்கியுள்ளார். இதனை பாஷா திருப்பித் தராததால் ஆத்திரமடைந்த ேஷக்தாஷிக், நன்னிமாபீ, ேஷக்அஷிக் ஆகிய மூவரும் சேர்ந்து பாஷாவை தாக்கினர். பாஷா அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் ேஷக்தாஷிக், நன்னிமாபீ, ேஷக்அஷிக் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மகள்களுடன் தாய் மாயம்

விழுப்புரம்: எம்.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி மனைவி வனிதா, 28; இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கடந்த 22ம் தேதி தனது மகள்கள் அசின், 10; ஹரினி, 5; ஆகியோருடன் கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பூங்குணத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு செல்வதாக கூறியவர் அங்கு செல்லவில்லை. புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம்: டவுன் போலீசார், கீழ்பெரும்பாக்கம் சண்முக பெருமாள் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கணேசன், 48; என்பவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

மனைவி, மகன் மாயம்: கணவர் புகார்

செஞ்சி: மொடையூர் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன், 33; இவரது மனைவி ஜோதி, 30; இவர்களுக்கு கிஷோர், 12; என்ற மகன் உள்ளார். கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் ஜோதி, கிேஷாரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டுமனை பிரச்னை: 5 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: பானாம்பட்டைச் சேர்ந்தவர் அய்யப்பன், 38; இவருக்கும், இவரது அண்ணன் அமிர்தராஜ், 41; என்பவருக்கும் இடையே வீட்டுமனை பாகம் பிரிப்பதில் கடந்த 20ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால், அமிர்தராஜ், அவரது மனைவி சங்கீதா, 36; மற்றும் அய்யப்பன் மனைவி ேஹமலதா, 35; இவரது தம்பி ரங்கா, தந்தை விஸ்வநாதன் ஆகியோர் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். விழுப்புரம் தாலுகா போலீசார் அமிர்தராஜ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

உண்டியல் திருட்டு: வாலிபர் கைது

திண்டிவனம்: விழுக்கம் செல்லியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை சில தினங்களுக்கு முன் திருடு போனது. மேலும், மேல்பாக்கம் துர்கை காளியம்மன் சிலை எதிரில் வைக்கப்பட்ட உண்டியலும் உடைக்கப்பட்டது. ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். நேற்று இன்ஸ்பெக்டர் பிருந்தா வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், இரு இடங்களிலும் உண்டியல் உடைத்து திருடியது தெரியவந்தது. உடன், ஏவலுாரைச் சேர்ந்த முனுசாமி மகன் ராஜசிம்மன், 26; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X