பொது செய்தி

தமிழ்நாடு

உதவி தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை

Added : செப் 24, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்-காரணமின்றி வேட்பு மனுவை நிராகரித்த உதவி தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.ரிஷிவந்தியம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, தண்டபாணி, துரைராஜ் ஆகியோர், மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகுமரனிடம் அளித்துள்ள புகார் மனு:மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர்

ரிஷிவந்தியம்-காரணமின்றி வேட்பு மனுவை நிராகரித்த உதவி தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.ரிஷிவந்தியம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, தண்டபாணி, துரைராஜ் ஆகியோர், மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகுமரனிடம் அளித்துள்ள புகார் மனு:மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் பிச்சைக்காரன் அளித்த வேட்புமனுவை, சரியான காரணமின்றி நிராகரித்த உதவி தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் தினத்தன்று முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.எனவே, தேர்தல் நடைபெறும் போது பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் குளறுபடி நடப்பதைத் தவிர்க்க வழக்கறிஞர் குழுவை"நியமித்து, சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி நேர்மையான முறையில் ஓட்டு எண்ணிக்கையை நடத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X