பொது செய்தி

தமிழ்நாடு

செல்வ மகள் திட்டம் விண்ணப்பம் வரவேற்பு

Added : செப் 24, 2021
Share
Advertisement
விழுப்புரம்-பெண் குழந்தைகள் நலனுக்காக செல்வ மகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் மோகன் செய்திகுறிப்பு:பெண் குழந்தைகளின் நலனுக்காக, இந்திய அஞ்சல் துறை மூலம் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர், காப்பாளர் இந்திய அஞ்சல் துறையின் மூலம் கணக்கு

விழுப்புரம்-பெண் குழந்தைகள் நலனுக்காக செல்வ மகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் மோகன் செய்திகுறிப்பு:பெண் குழந்தைகளின் நலனுக்காக, இந்திய அஞ்சல் துறை மூலம் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர், காப்பாளர் இந்திய அஞ்சல் துறையின் மூலம் கணக்கு துவங்கப்படுகிறது.இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு 7.6 சதவீதம் ஆண்டிற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. பெற்றோர்கள், காப்பாளர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி கணக்கினை தொடங்கலாம். ஒருவொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கணக்கில் செலுத்தலாம்.கணக்கு துவங்கப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டு வரை இக்கணக்கில் தொகையினை செலுத்தி வரவு வைக்கலாம். கணக்கில் உள்ள இருப்பு வைப்பு தொகையிலிருந்து 50 சதவீதம் உயர்கல்விக்காக, பத்தாம் வகுப்பு முடித்தபின் அல்லது 18 வயது பூர்த்தியான பின்) பெற்றுக்கொள்ளலாம். இக்கணக்கின் முதிர்வு தொகையினை கணக்கு தொடங்கி 21 ஆண்டு நிறைவடைந்த பிறகோ அல்லது அப்பெண் குழந்தையின் திருமணம் இவற்றில் எது முதலில் வருகிறதோ அன்று பெற்றுக் கொள்ளலாம்.இத்திட்டத்தில் செலுத்தும் தொகை வட்டி முதிர்வுத் தொகை என அனைத்துக்கும் வருமான வரி கணக்கு விதி 80சியின் கீழ் வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.indiapost .gov.in என்ற இணைய தளத்தை காணலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X