பொது செய்தி

இந்தியா

'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.முப்படைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ தளவாடங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.'ஆவ்ரோ - 748'இந்நிலையில்,இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும்
 'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

புதுடில்லி:'ஏர் பஸ்' நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

முப்படைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ தளவாடங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.'ஆவ்ரோ - 748'இந்நிலையில்,இந்திய விமானப்படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டுவரும் 'ஆவ்ரோ - 748' ரக விமானங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்துடன், மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, 56, சி - 295 ரக போக்குவரத்து விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் செவில்லே பகுதியில் இயங்கும் ஏர் பஸ் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து 16 விமானங்கள் வினியோகிக்கப்பட உள்ளன. வினியோகம்இந்த ஒப்பந்தத்தின்படி, மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் உள்ள, 'டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தால் தயாரித்து வினியோகிக்கப்பட உள்ளன.


ரத்தன் டாடா பாராட்டு

'ஏர் பஸ்' நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, ஏர் பஸ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ராணுவ அமைச்சகத்தை பாராட்டி, பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:ஏர் பஸ் - டாடா திட்டத்தின்கீழ், 56, சி - 295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, மிகப்பெரிய நடவடிக்கை.

இந்த முயற்சியின் வாயிலாக இந்திய விமானத் துறை நல்ல வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் ராணுவ விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது இதுவே முதன் முறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X