அரசியல் செய்தி

தமிழ்நாடு

பு.த., கட்சிக்கு 'டிவி' சின்னம் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலில், புதியதமிழகம் கட்சிக்கு, 'டிவி' சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை, மாநில தேர்தல் கமிஷன் நிராகரித்து, 17ம் தேதி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், புதிய தமிழகம் கட்சி பொதுச் செயலர் வி.கே.அய்யர், மனு தாக்கல் செய்தார். 'டிவி' சின்னம் ஒதுக்கவும் கோரினார்.தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலில், புதியதமிழகம் கட்சிக்கு, 'டிவி' சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை, மாநில தேர்தல் கமிஷன் நிராகரித்து, 17ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், புதிய தமிழகம் கட்சி பொதுச் செயலர் வி.கே.அய்யர், மனு தாக்கல் செய்தார். 'டிவி' சின்னம் ஒதுக்கவும் கோரினார்.தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, '2016ல் நடந்த தேர்தலில், 'டிவி' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன்பின், அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை. 'எனவே, மாநில தேர்தல் கமிஷன், தன் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முடிவை, அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும்' என கூறியுள்ளது.

விசாரணையை, வரும், 27க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் சிவசண்முகம், இந்திய தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன், 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X