தமிழ்நாடு

அறிவுரை: தேர்தலில் நடுநிலையுடன் பணியாற்ற அலுவலர்களுக்கு...புகாருக்கு இடமளிக்கக்கூடாது என கலெக்டர் வலியுறுத்தல்

Added : செப் 24, 2021
Share
Advertisement
விழுப்புரம்,-விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கினார்.விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலின்போது, ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி நிலை
 அறிவுரை: தேர்தலில் நடுநிலையுடன் பணியாற்ற அலுவலர்களுக்கு...புகாருக்கு இடமளிக்கக்கூடாது என கலெக்டர் வலியுறுத்தல்

விழுப்புரம்,-விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலின்போது, ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தலா ஒரு மையத்தில் இப்பயிற்சி முகாம் நடந்தது.கோலியனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் முகப்புச்சீட்டு, முகவர் சீட்டு போன்றவற்றை மிக கவனமாக பார்க்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு முதல் நாளே ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவுக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள், ஆவணங்கள் மற்றும் உரிய படிவங்கள் வரப்பெற்றதை உறுதி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், ஓட்டுப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஓட்டுப் பெட்டியினை திறந்து காண்பித்து காலியாக உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் முடித்திட வேண்டும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான்கு பதவியிடங்களுக்கான ஓட்டு சீட்டுகளும் தனித்தனியாக 4 வண்ணங்களில் பயன்படுத்துவதால் கவனமுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.வாக்காளர்கள் ஓட்டளித்த பின் ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பான முறையில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பயிற்சி கையேட்டினை படித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.மேலும், சந்தேகங்கள் இருப்பின் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மற்றும் கண்காணிப்பு அலுவலரிடம் உடனுக்குடன் கேட்டறிந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்றி அவ்வப்போது கை கழுவும் திரவத்தினை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செலுத்தாதவர்கள் சுகாதாரத்துறை சார்பில் தேர்தல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மோகன் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், சி.இ.ஓ., கிருஷ்ணப்ரியா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X