சில வரி செய்திகள்...: இந்தியா

Added : செப் 24, 2021
Share
Advertisement
உத்தரகண்ட் அமைச்சர் விடுவிப்புடேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் 2016ல் நடந்த போராட்டத்தில் பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த போலீஸ் குதிரை, சிகிச்சை பலனின்றி பலியானது. இதனால், தற்போதைய அமைச்சர் கணேஷ் ஜோஷி உட்பட ஐந்து பேர் மீது விலங்குகள் வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்கு பதிவானது. போதிய ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை என

உத்தரகண்ட் அமைச்சர் விடுவிப்பு

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் 2016ல் நடந்த போராட்டத்தில் பா.ஜ.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த போலீஸ் குதிரை, சிகிச்சை பலனின்றி பலியானது. இதனால், தற்போதைய அமைச்சர் கணேஷ் ஜோஷி உட்பட ஐந்து பேர் மீது விலங்குகள் வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்கு பதிவானது. போதிய ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை என நேற்று கூறிய நீதிமன்றம், அமைச்சர் உட்பட ஐந்து பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தது.

பலாத்காரம்: மேலும் இருவர் கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, ஜன., 29 முதல் எட்டு மாதங்களாக 30க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி மீட்கப்பட்ட நிலையில், 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் 33 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இரு சிறுவர்கள் உட்பட 26 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை, நேற்று நவிமும்பை பகுதியில் போலீசார் கைது செய்தனர்.

சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், நாட்டின் மிகப்பெரிய சாதுக்கள் அமைப்பான பாகம்பரி மடத்தின் தலைவராக இருந்த நரேந்திர கிரி, சமீபத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் முக்கிய சீடர்கள் மூவர் கைதாயினர். இதற்கிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையின் அடிப்படையில் நரேந்திர கிரியின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பி.எஸ்.எப்., வீரர்கள் பலி

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் வங்கதேச எல்லையில் உள்ள காக்ராச்சேரியில் பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கிருந்த வீரர்கள் பிரதாப் சிங் மற்றும் சத்பீர் சிங் இடையே நேற்று முன்தினம் திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பிரதாப் சிங், துப்பாக்கியால் சுட்டதில் சத்பீர் சிங் பலியானார். அதை தடுக்க முயன்ற எஸ்.ஐ., ராம் குமார் காயமடைந்தார். அங்கிருந்த மற்றொரு வீரர், பிரதாப் சிங்கை சுட்டுக்கொன்றார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி வெடித்து வீரர் பலி

பீஜப்பூர்: சத்தீஸ்கரில் பணியில் இருந்த சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏட்டு திரிலோக் சிங், 37, உள்ளிட்ட சிலர் விடுப்பில் சொந்த ஊர் புறப்பட்டனர். இதனால் தங்கள் துப்பாக்கிகளை மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க பஸ்சில் பீஜப்பூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திரிலோக் சிங்கின் துப்பாக்கி திடீரென வெடித்ததில், அவர் மீதும், அருகில் இருந்த மற்றொரு வீரர் ராஜேந்திர சிங் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இதில் திரிலோக் சிங் பலியானார். ராஜேந்திர சிங் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X