சிறுமி பலாத்காரம் அர்ச்சகருக்கு 'ஆயுள்'

Added : செப் 24, 2021
Share
Advertisement
கொச்சி:கேரளாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்த உயர் நீதிமன்றம், 'இதுபோன்ற அர்ச்சகரின் பூஜைகளை எந்த தெய்வம் ஏற்கும்?' என, கேள்வி எழுப்பி உள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொச்சியில் 2013ல், சாலையில் மூன்று குழந்தைகளுடன் சுற்றித் திரிந்த மனநலம்

கொச்சி:கேரளாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்த உயர் நீதிமன்றம், 'இதுபோன்ற அர்ச்சகரின் பூஜைகளை எந்த தெய்வம் ஏற்கும்?' என, கேள்வி எழுப்பி உள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொச்சியில் 2013ல், சாலையில் மூன்று குழந்தைகளுடன் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை போலீசார் மீட்டனர். கணவரால் கைவிடப்பட்ட அந்த பெண், தன் குழந்தைகளுடன், கோவில் அர்ச்சகரான மது என்பவர் அரவணைப்பில் வசித்து வந்தது தெரிந்தது.

மூன்று குழந்தைகளில் ஒரு சிறுமியை, அந்த அர்ச்சகர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அர்ச்சகர் மது, 'போக்சோ' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இதை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம், மதுவை குற்றவாளியாக அறிவித்தது. கேரள உயர் நீதிமன்றத்தில், குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு: ஒரு நபர், தன் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்துவிட்டு சென்றால், சுற்றித் திரியும் கழுகுகள், கைவிடப்பட்ட பெண்ணை மட்டும் அல்லாமல், குழந்தைகளையும் இரையாக்க எண்ணுகின்றன.இந்த வழக்கில் ஒரு அர்ச்சகர், கைவிடப்பட்ட பெண் மற்றும் குழந்தைகளை அரவணைப்பதாக கூறி ஏமாற்றி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இப்படிபட்ட கோவில் அர்ச்சகரின் பூஜைகளை, எந்த தெய்வம் ஏற்கும்; இதுபோன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளி மதுவுக்குஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X