அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீரிழிவு, ரத்த அழுத்தம் பரிசோதனை திட்டம் துவக்கம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை திட்டத்தை, முதல்வர் ஸடாலின் துவக்கி வைத்தார்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 'மக்களைத் தேடி மருத்துவம்' மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மையத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு
 நீரிழிவு, ரத்த அழுத்தம்  பரிசோதனை திட்டம் துவக்கம்

சென்னை:தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை திட்டத்தை, முதல்வர் ஸடாலின் துவக்கி வைத்தார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 'மக்களைத் தேடி மருத்துவம்' மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மையத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்த சாத்தியக்கூறு மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

மேலும், காது கேளாதோர் வாரத்தை ஒட்டி, திருச்சி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனைக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனைப்புலி பெருக்க மரத்தை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.முன்னதாக, விழாவில் காது கேட்கும் திறன் குறைந்த முதியவர்களுக்கு, காது கேட்கும் கருவிகளை வழங்கினார். பின், காதுநுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளுக்கு, காது கேட்கும் திறனை வெளிப்படுத்தும் கருவியை, அவர்களது காதில் பொருத்தி, 'ஸ்விட்ச் ஆன்' செய்தார்.

அறுவை சிகிச்சை செய்து, ஓராண்டு முறையான பயிற்சிக்கு பின் பேசும் திறன் பெற்ற குழந்தைகள், விழாவில் திறக்குறள் ஒப்புவித்தனர். தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி பாடல்கள் பாடினர். அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X