பொது செய்தி

தமிழ்நாடு

702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்

Added : செப் 24, 2021
Share
Advertisement
சென்னை:அக்டோபர் முதல், தமிழகத்தில் 'ஏசி' பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிக்கை:கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மே 10 முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, 'ஏசி' பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மீண்டும்
 702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்

சென்னை:அக்டோபர் முதல், தமிழகத்தில் 'ஏசி' பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிக்கை:கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மே 10 முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, 'ஏசி' பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மீண்டும் 'ஏசி' பஸ்களை இயக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 48 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இருக்கை வசதியுள்ள 100 பஸ்கள்; படுக்கை வசதியுள்ள 34 பஸ்கள்; இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 206 பஸ்கள் என, மொத்தம் 340 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 314 பஸ்கள் உட்பட மொத்தம் 702 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளன.கடந்த ஐந்து மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த பஸ்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, கொரோனா தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும், பயணியர் முக கவசம் அணிந்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X