36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

Updated : செப் 25, 2021 | Added : செப் 24, 2021 | கருத்துகள் (85) | |
Advertisement
சென்னை: தமிழகம் முழுதும், போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 36 மணி நேரத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தலைதுாக்கும் கொலை குற்றங்களை குறைக்க, இந்த அதிரடிநடவடிக்கையை டி.ஜி.பி., சைலேந்திரபாபு எடுத்துள்ளார்.தமிழகத்தில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். இதில், 6,000 ரவுடிகளுடன்
தமிழகம், ரவுடிகள், கைது, அரிவாள், துப்பாக்கி, கத்திகள், பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுதும், போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 36 மணி நேரத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைதுாக்கும் கொலை குற்றங்களை குறைக்க, இந்த அதிரடிநடவடிக்கையை டி.ஜி.பி., சைலேந்திரபாபு எடுத்துள்ளார்.தமிழகத்தில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். இதில், 6,000 ரவுடிகளுடன் சென்னை முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப ரவுடிகளை, 'ஏ பிளஸ்'மற்றும் 'ஏ,பி,சி' என, போலீசார் வகைப்படுத்தி உள்ளனர்.பட்டியல்


பெரிய தாதாக்கள், 'ஏ பிளஸ்' பட்டியலில் உள்ளனர். கூலிக்கு கொலை செய்யும் ரவுடிகள், 'ஏ' பிரிவிலும், அடிதடி, மாமூல் வசூலிப்பு என, அட்டூழியம் செய்பவர்கள், 'பி' பிரிவிலும், கொலை முயற்சி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவோர், 'சி' பிரிவு பட்டியலிலும்உள்ளனர். இவர்களுடன் திருந்தி வாழ்வதாக கூறப்படும் பழைய குற்றவாளிகள் பட்டியலையும், போலீசார் பராமரித்து கண்காணித்து வருகின்றனர்.எனினும், தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
1990களில் வாலாட்டி வந்த அயோத்திகுப்பம் வீரமணி, வெள்ளை ரவி, 'பங்க்' குமார் என, ஏ பிளஸ் ரவுடிகள், 'என்கவுன்டரில்' போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பழிக்கு பழியாக ரவுடிகள், ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்து, தங்கள் கதைகளை முடித்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. 2000ம் ஆண்டுக்கு பின், ரவுடிகளுக்கு எதிரான, போலீசாரின் துப்பாக்கி சத்தம் குறைந்து போனது. இதனால், ரவுடிகள் மீண்டும் தலைதுாக்க துவங்கினர். அதுவும் இளம் வயதினர், கூலிப்படையாக மாறி உள்ளனர்.


latest tamil newsசமீபத்தில், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ம.ஜ.க., நிர்வாகி வசீம் அக்ரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை, கஞ்சா வியாபாரியான, 'டீல்' இம்தியாஸ் என்பவர் முன்னின்று நடத்தி உள்ளார். இதற்காக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 21 - 25 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினரை, கூலிப்படையினராக மாற்றியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல, நெல்லை, துாத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இரு தினங்களுக்கு முன், பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக, திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டியில் நிர்மலாதேவி என்பவர் தலை துண்டித்து, கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் மீண்டும் தலைதுாக்கி உள்ளதால், ஒழிப்பு நடவடிக்கையை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு முடுக்கி விட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, மாநிலம் முழுதும் போலீசார் விடிய விடிய ரவுடிகளின் வீடு, பதுங்கி இருக்கும் இடங்கள், கள்ளக்காதலியின் வீடுகள் என, பல இடங்களில் அதிரடியாக புகுந்து, 870 பேரை சுற்றி வளைத்தனர்.உறுதிமொழி பத்திரம்சென்னை கொருக்குப் பேட்டை பகுதியில் மாவா விற்பனையில் ஈடுபட்டிருந்த உஷா, காளியப்பன் உள்ளிட்ட ரவுடிகளை சுற்றி வளைக்கப்பட்டனர். அதேபோல் எம்.கே.பி., நகரில், வெற்றிவேல், செல்வகுமார், வியாசர்பாடியை சேர்ந்த கவுதம் ஆகியோரும் பிடிபட்டனர்.ரவுடிகள், 450 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், 181 பேர், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள்.மேலும் ரவுடிகள் 420 பேரிடம், 'ஓராண்டுக்கு எவ்வித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம். மீறினால், எங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்' என, உறுதிமொழி பத்திரம் பெற்றுள்ளனர்.பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து, 250 கத்திகள், அரிவாள்கள் என பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; நாட்டு துப்பாக்கிகள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன. ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் கடந்த 23 ம் தேதி இரவு முதல் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கடந்த 36 மணி நேரத்தில் 15,370 பழைய குற்றவாளிகளிடம் சோதனை நடந்தது. அதில், 2,512 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்ப்பட்டவர்களிடம் இருந்து 5 நாட்டுத்துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எதிரான போலீசாரின் இந்த கடுமையான நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Vaidhinathan - Mannivakkam Chennai 600048,இந்தியா
25-செப்-202121:15:28 IST Report Abuse
S Vaidhinathan The same police were concentrating on foisting false cases on padmasesadri school and other schools and harassing them for the last three months under instructions from ruling party. Now only they got the budhdhi to arrest roadies who are on the road intimidating public with the Sickles and guns. The police should concentrate now on manufacture of the weapons used by these roadies immediately so that arms supplies are curtailed.
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
25-செப்-202120:11:53 IST Report Abuse
NARAYANAN.V மணப்பாறை மணல் மாபியா ஆரோக்கியசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எந்தத் தகவலும் காணவில்லையே.அந்தக் குற்றவாளியை ஆளும் கட்சியினர் அரவணைப்பில் இருக்கிறாரா ? கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகளின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான டிப்பர் லாரிகள் நம்பர் பிளேட் இல்லாமல் தமிழகத்திலிருந்து கனிமவளங்களை இரவோடு இரவாக மாமாங்கமாக கடத்திச் செல்வதாக வந்த செய்திகளின் உண்மைத் தன்மை அறியப்பட்டு அந்த சம்பவங்களுக்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டதா ? ஏற்காடு பங்களாவாசி கைக்கு எல்லாம் போய்விட்டதா ?
Rate this:
Cancel
Vimalathithan - Abu Halifa,குவைத்
25-செப்-202119:56:53 IST Report Abuse
Vimalathithan 700 பேர விடுதலை பண்ணீங்களே அது என்ன கணக்கு... அவிக வேலை செய்ய இவர்கள் தடையாக உள்ளார்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X