10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கை விசாரிக்க தடை

Added : செப் 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நுஜைம் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில்,

புதுடில்லி:பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.
இதை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நுஜைம் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி, மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், அந்த மனுவை இதே வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X