பொது செய்தி

தமிழ்நாடு

புகார்கள் மீது நடவடிக்கை தேர்தல் ஆணையம் உறுதி

Added : செப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தேர்தல் புகார்களின் உண்மை தன்மையை கண்டறிந்து, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.ஆணையத்தின் அறிக்கை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்,28 மாவட்ட இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொது மக்கள், வேட்பாளர்களுக்கு புகார் ஏதும் இருந்தால், அதை பெற, மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்

சென்னை:'தேர்தல் புகார்களின் உண்மை தன்மையை கண்டறிந்து, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆணையத்தின் அறிக்கை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்,28 மாவட்ட இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொது மக்கள், வேட்பாளர்களுக்கு புகார் ஏதும் இருந்தால், அதை பெற, மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் மையம், 15ம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இதுவரை 285 புகார்கள் பெறப்பட்டு உள்ளன.

அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, உரிய விளக்கங்கள், தகவல்கள், தெளிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. புகார்களின் தன்மைக்கேற்ப, அவை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. புகார்களின் உண்மை தன்மையை கண்டறிந்து, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை, மையம் தொடர்ந்து இயங்கும். எனவே, 1800 - 4257072, 1800 - 4257073, 1800 - 4257074 ஆகிய கட்டணமில்லா எண்களில், புகார் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-செப்-202116:39:05 IST Report Abuse
BASKAR TETCHANA நடவடிக்கை என்ற பேரில் ஆளும் கட்சிக்கு தான் உதவி செய்கிறீர்கள். உண்மையாக உழைக்கவில்லை. ஒரு ஊரில் மனு தாக்கல் செய்யும் பொது அந்த மனுவுக்கு கீழே பத்தாயிரம் கட்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டது அதை பற்றி மூச்சை காணோம். இது தான் உங்கள் நிர்வாக லட்சணமா. நீங்கள் எல்லாம் அறுபது வயது வரை வேலை செய்பவர்கள் அப்புறம் பென்சன் வாங்குவீர்கள். ஆனால் அரசியல் ...கள் 5 வருடம் தான் அவர்கள் ஆயுசுகாலம் அப்புறம் ஸிரோ தான். அதை நினைவில் கொண்டு வேலை செய்யுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X